அணிந்துரை
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா
முனைவர் நி.அ. செய்யது மஸஊது ஜமாலி
முதல்வர், புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி &
தலைவர், அரபு மற்றும் இஸ்லாமிய இயலகம், பி.ஏ. அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பல்கலைக் கழகம்
ஹதீஸ் நூல் தொகுப்பு வரலாற்றில் ஸாலிஹ் பின் அஹ்மத் அல்ஷாமி அவர்களின் 'மஆலிம் அஸ்ஸுன்னஹ் அந்நபவிய்யா' என்ற இத்தொகுப்பு நூல் ஒரு புதிய அத்தியாயம் படைத்துள்ளது. இந்நூலின் மூலாதாரங்களாக விளங்கும் 14 நூல்களைத் தொகுப்பாசிரியர் மீளாய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். அவர் அவற்றிலுள்ள எல்லா ஹதீஸ்களையும் ஒன்று திரட்டி ஆய்வு செய்து, பலமுறை பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களை ஒரே பதிவாகத் தேர்வு செய்து புதிய தொகுப்பாக இந்நூலில் வழங்கியுள்ளார். இதனால் 14 தொகுப்புகளில் உள்ள ஹதீஸ்களுள் ஒன்றுகூட விடுபடாமல் இந்த ஒரே தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த அரிய நூலைத் தமிழாக்கம் செய்யும் பெரும் பணியை அன்பு நண்பர் மௌலானா முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஏற்றுள்ளார். அவர் ஏற்கெனவே பல அரபு நூல்களைத் தமிழாக்கம் செய்திருப்பதால் மொழிபெயர்ப்புப் பணி அவருக்குக் கைதேர்ந்த கலை. அதிலும் குறிப்பாக, சுனன் நஸாயி, இப்னு மாஜா போன்ற ஹதீஸ் தொகுப்புகளை அவர் ஏற்கெனவே தமிழாக்கம் செய்திருப்பதன் பயனாக அவரின் மொழிபெயர்ப்பு முதிர்ச்சியை இந்நூலில் தெளிவாகக் காண முடிகிறது.
இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடைமுறை (சுன்னா) மனித குலத்துக்கு ஒரு முழுமையான வழிகாட்டும் நெறிமுறையாக விளங்குகிறது. அது எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் மிக உகந்தது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்லாது தாயின் வயிற்றில் கருவுற்றது முதல் இறப்புக்குப் பின் வாழ்க்கை வரையிலும் அது வழிகாட்டுகிறது. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், உடல், ஆன்மா ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் உன்னத முன்மாதிரியாக நபியின் வாழ்வியல் விளங்குகிறது.
அது நடுநிலையான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதோடு, மக்கள் அன்றாட நடைமுறை வாழ்வில் பின்பற்றி வாழ்வதற்கும் மிக எளிமையானதாக விளங்குகிறது. இது நபிவழியின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவாகக் கூறுகிறது.
வாய்மொழி அறிவிப்பு:
குர்ஆனைத் தவிர மற்ற எதையும் எழுதி வைக்க வேண்டாம்' என்று ஆரம்பக் காலக்கட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தி வந்தார்கள். மேலும், தம் ஹதீஸ்கள் மௌனம் செய்யப்பட்டு வாய்மொழியாகவே மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தம் தோழர்களை அறிவுறுத்தி வந்தார்கள். ஆகவேதான், ஹதீஸ் வாய்மொழி அறிவிப்பாகவே இருந்து வந்தது.
நபிகளாரிடமிருந்து ஹதீஸ்களைக் கற்ற நபித்தோழர்கள், நபியவர்களின் மறைவுக்குப் பின்பு பல ஊர்களுக்குப் பிரிந்து சென்றனர். அவர்கள் அவற்றை அடுத்த தலைமுறையினருக்குப் போதித்து வந்தனர். இவ்வாறாக, இரண்டு அல்லது மூன்று தலைமுறை வரை ஹதீஸ்கள் வாய் மொழியாகவே அறிவிக்கப்பட்டு வந்தன. இதற்கு
விதிவிலக்காக ஹதீஸ்கள் சிறு சிறு தொகுப்புகளாக ஆங்காங்கு ஆரம்பக் காலம் முதலிலே எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் உறுதி செய்கின்றன.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஹதீஸ்களை முறையாகத் தொகுக்கும் பணி தொடங்கியபோது ஹதீஸ் வல்லுநர்கள் ஊர் ஊராகச் சென்று அறிவிப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் அறிவிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்புதான் அவற்றைப் பதிவு செய்தனர்.
நபித்தோழர் ஒருவர் அறிவித்த ஒரு ஹதீஸை பலர் கேட்டிருக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறையினருக்கு அதனை அறிவித்திருக்கலாம். இவ்வாறு ஒரே ஒரு ஹதீஸ் பற்பல அறிவிப்பாளர் வழியாக நமக்கு வந்துசேர்ந்திருக்கலாம்.
ஆகவே ஒவ்வொரு ஹதீஸின் ஒவ்வோர் அறிவிப்பாளர் தொடர் சங்கிலியை ஆரம்பம் முதல் கடைசி வரை துல்லியமாக ஹதீஸ் வல்லுநர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
இந்த அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் 'இஸ்னாத்' என்று அரபியில் குறிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஒவ்வோர் இஸ்னாதையும் ஒவ்வொரு ஹதீஸாகவே ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் ஒரே ஹதீஸ் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
ஹதீஸ்களைக் கணக்கிடும் முறைகள்:
ஹதீஸ்களைக் கணக்கிடுவதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன.
- இஸ்னாதை அறிவிப்பாளர் தொடரை அடிப்படையாக வைத்துக் கணக்கிடுதல். உதாரணமாக ஒரு ஹதீஸை 10 ஸஹாபாக்கள் அறிவித்திருந்தால் அது 10 ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்படும். அவர்களுள் வ்வொருவரிடமிருந்தும் மூவர் செவிமடுத்து தத்தம் மாணவர்கள் வழியாக அறிவித்திருந்தால் அவை மொத்தம் 30 இஸ்னாதுகள். ஆகவே அவை 30 ஹதீஸ்களாகக் கணக்கிடப்படுகின்றன.
- அறிவிக்கும் ஸஹாபியை அடிப்படையாக வைத்துக் கணக்கிடுதல். உதாரணமாக, ஒரே ஹதீஸை 10 ஸஹாபாக்கள் அறிவித்திருந்தால் அது 10 பதில்கள். அவற்றை 10 ஹதீஸ்களாகவே கணக்கிடப்படும்; அது எத்தனை தொடர் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் சரியே.
- ஹதீஸ் உரையை அடிப்படையாக எடுத்துக்கொண்டு கணக்கிடுதல்: உதாரணமாக ஒரு ஹதீஸை எத்தனை நபித்தோழர்கள் அறிவித்திருந்தாலும் அல்லது அது எத்தனை அறிவிப்பாளர்தொடர் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு ஹதீஸாகவே கணக்கிடப்படும்.
நூல் ஆசிரியரின் கணக்கீடு:
மேற்கூறிய மூன்று கணக்கீட்டின்படி ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கையை நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு கணக்கிடுகிறார்:
- முதல் கணக்கீட்டின்படி 14 மூலாதார ஹதீஸ் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 1,14,194.
- இரண்டாவது கணக்கீட்டின்படி மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 28,430.
- மூன்றாவது கணக்கீட்டின்படியே நூல் ஆசிரியர் அல்ஜாமீ இன்நூலாஸைத் தொகுத்திருக்கிறார். இருப்பினும் அவருடைய கணக்கீடு இன்னும் மிகத் துல்லியமான பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் சில:
ஒரு ஹதீஸைப் பலர் அறிவிக்கும்போது அதன் சொற்கள் வித்தியாசமாக இருந்தால் அவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து, அதனை ஒரு ஹதீஸாகவே நூலாசிரியர் கணக்கிடுகிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் அல்லாத நபித்தோழர்களின் உரைகளைக் குறைந்த அளவிலேயே நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அடிப்படையில் மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 3,921 என்று நூலாசிரியர் முடிவு செய்கிறார். இதனையே, இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த வகையில் இந்நூல் ஹதீஸ் தொகுப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக விளங்குகிறது. இதனைத் தமிழாக்கி தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்குவது சாலச்சிறந்த பணியாகும்.
மொழிபெயர்ப்பாளர் முனைவர் மௌலானா நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களுக்கும் இந்நூலைப் பதிப்பித்து வெளியிடும் அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவையை ஏற்றுக்கொள்வானாக! இந்நூல் வழியாக நம் மக்களுக்கு நல்வழி காட்டுவானாக. ஆமீன்!
முனைவர் நி.ஜி. செய்யது மஸ்தூது ஷமாலி
வண்டலூர், சென்னை.
21.11.2022
மௌலவி அல்ஹாஃபிழ் ரி.சி. இல்யாஸ் ரியாஜி
துணைச் செயலாளர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை,
தலைமை இமாம், ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி, சென்னை.
ஸஹீஹ், ளயீஃப் என்ற இரண்டு சொற்கள் பரவலாக முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தி, பயன்படுத்தி வருகின்ற சொற்களாக இருக்கின்றன. ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான நபிமொழி. இதை மட்டுமே பின்பற்ற வேண்டும். இதுவே நம்மைச் சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். ளயீஃப் என்றால் ஆதாரப்பூர்வமற்ற நபிமொழி. இதைப் பின்பற்றக் கூடாது. ஏனெனில் இது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். இப்படியொரு தட்டையான புரிதல் முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவருகிறது.
ஆண்டாண்டு காலமாக இஸ்லாமிய அறிவுத்துறையில் ஆழமான அலசலுக்கும் விசாலமான விவாதத்திற்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு விஷயத்தைத் தட்டையான புரிதலுக்கு மட்டுமே தயாராக இருக்கின்ற பொதுமக்களிடம் கொண்டு சென்றதன் விளைவே இது.
உண்மையில் ஸயீஃபான எல்லா ஹதீஸ்களும் ஒரே தரமானவையா? ஸஹீஹான எல்லா ஹதீஸ்களும் ஒரே தரமானவையா? இல்லை என்பதுதான் இவ்விரண்டு கேள்விகளுக்கான பதில்.
இமாம் இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸயீஃபான ஹதீஸ்கள் நாற்பத்து ஒன்பது வகைகள் உள்ளன என்று கூறியுள்ளார்கள்.
ஸயீஃபான எல்லா ஹதீஸ்களும் விடப்பட வேண்டியவைதாடு; பின்பற்றத்தக்கவையல்ல என்றால் அவை அனைத்தும் 'புறக்கணிக்கப்பட வேண்டியவை' என்ற ஒரே வகைக்குள்ளேயே அடங்கிவிடும். நாற்பத்து ஒன்பது வகைகள் உள்ளன என்பதிலிருந்து ஒவ்வொரு வகை ஸயீஃபுக்கும் ஒவ்வொரு வகையான சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது புரிகிறது. எனவே எல்லா ஸயீஃப்களையும் ஒரே நேர்க்கோட்டில் வைப்பது சரியன்று.
ஓர் ஊரில் ஓர் அறிஞர் இருந்தார். நபிமொழிகளை அறிவிக்கும் அவ்வறிஞரின் வீடு ஒரு நாள் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அதுவரை அவர் அறிவித்து வந்த ஹதீஸ்கள் ஸஹீஹ் என்று ஏற்கப்பட்டன. தீ விபத்துக்குப்பின் அவர் அறிவித்த ஹதீஸ்கள் ஸயீஃப் எனக் கருதப்பட்டன.
அவர் நபிமொழிகளை எழுதிவைக்கும் பழக்கமுள்ளவர். தம் மாணவர்களுக்கு ஹதீஸ்களை அறிவிக்கும்போது மனப்பாடமாகவே அறிவிப்பார். எழுதியவைத்திருக்கும் ஏட்டைத் திறந்து பார்க்கமாட்டார். எனினும் அந்த ஏட்டைக் கைவசம் வைத்திருப்பார்.
அந்த ஏடு அவரின் நினைவாற்றலுக்கு ஒரு துணையாக இருந்திருக்கிறது. அவ்வளவுதான். வீடு தீப்பற்றுக்கு இம்கானதில் அந்த ஏடும் எரிந்துவிட்டது. விபத்துக்குமுன் ஹதீஸ்களை அறிவித்தபோது திட்டவட்டமான சொற்களையே பயன்படுத்தியிருந்தார். அதாவது 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்', 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள்' என்ற சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
இப்படித் திட்டவட்டமான சொற்களைக் கூறுவதில் அவருக்குத் தயக்கமேதும் இருந்ததில்லை. தீ விபத்தில் ஏடு எரிந்தபின் அவர் ஹதீஸ்களை அறிவிக்கும் சொற்களை மாற்றிக்கொண்டார். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படித்தான் சொல்லியிருப்பார்கள்', 'இப்படித்தான் செய்திருப்பார்கள் என்றே பெரும்பாலும் நான் நினைக்கிறேன்' எனச் சொல்லத் தொடங்கினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வார்த்தைகளை மாற்றி வேறு சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கூருணர்ச்சி காரணமாக அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது அந்த அறிஞருடைய இறையச்சத்தின் வெளிப்பாடு.
ஏடு எரிந்துவிட்டதால் அதைத் திறந்து பார்த்து ஹதீஸின் நேரடிச் சொற்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே திட்டவட்டமான சொற்களை அவர் தவிர்த்துவிட்டார்.
திட்டவட்டமான சொற்களால் அறிவிக்கப்படாத நபிமொழிகள் ஸயீஃப் என்ற தரத்துக்கு இறங்கிவிடுகின்றன. எனவே ஒரே அறிவிப்பாளர் கூறும் ஹதீஸ்கள்கூட ஸஹீஹ், ஸயீஃப் என்ற இரு வகையான தரத்திலும் சேர்க்கப்பட்டுவிடுகின்றன. இது மட்டுமல்லாமல் ஓர் அறிவிப்பாளரின் அதிகமான கூருணர்ச்சியும் பேணுதலும்கூட அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலவீனமாவதற்கரிய காரணமாகிவிடுவதுண்டு. இவ்வாறான ஹதீஸ்களை பலவீனமானவை என்று கூறி, ஒதுக்கிவிட முடியுமா என்ற கேள்வி அர்த்தமற்றது கிடையாது.
இஸ்லாம் உருவாகித்தந்த முதல் தலைமுறையாம் நபித்தோழர்களின் காலத்திலிருந்து சில செயல்கள் சட்ட அந்தஸ்தைப் பெற்று நடைமுறையில் இருந்து வருகின்றன. உதாரணமாக "இசை கேட்பதும் இசைப்பதும் கூடாது', "திருமணத்துக்கு இரண்டு சாட்சிகள் தேவை', 'திருமணங்களைப் பள்ளியவாசலில் நடத்த வேண்டும்' போன்ற நடைமுறைகள் இந்தச் சமுதாயத்திடம் தொடக்கக் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளன.
எனினும் இவை குறித்தான ஹதீஸ்கள் எல்லாமே பலவீனமானவை. அறிவிப்பாளர்கொடர் பலவீனமாக இருக்கிறது என்பதற்காக அந்த நடைமுறைகளின் சட்ட அந்தஸ்தைப் பறித்துவிட முடியுமா என்ற கேள்வியை என்ன செய்வது?!
இத்துறையின் வல்லுநரான பேரறிஞர் அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘ஹதீஸ்கள் பலவீனமாக இருக்கின்றன என்பதற்காக இந்த நடைமுறைகளின் சட்ட அந்தஸ்தைப் பறிக்க முடியாது’ என்கிறார்கள்.
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மதீனாவாசிகளில் பெரும்பாலோரின் (ஜும்ஹூர்) நடைமுறையில் இருக்கும் செயல்பாடுகளை (அதாவது ஷுஹ்ரஹி அமுலில் மதீனா) தம் சட்ட மூலாதாரங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
நாம் சொல்ல வருவது இதுதான். ‘ஸஹீஹ் என்றால் ஏற்கத்தக்கது, ளயீஃப் என்றால் புறக்கணிக்க வேண்டும்’ என்ற ஒரு தட்டையான, மேம்போக்கான புரிதல் சரியன்று.
மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா என்ற இந்த நூல் இஸ்லாமிய அறிவலகில் புகழ் மேவிய பதினான்கு நூல்களிலுள்ள 1,14,194 நபிமொழிகளுள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருக்கும் ஹதீஸ்களை ஒரே தடவை மட்டும் பதிவு செய்து அவற்றை 28,430 ஆகக் குறைத்து, பிறகு ஒத்த கருத்துள்ள அல்லது ஏறத்தாழ அதே கருத்துள்ள ஹதீஸ்களையும் நீக்கி 3,921 ஹதீஸ்களாகக் குறைத்து இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ அவர்கள்.
திரும்பத் திரும்பக் கூறலையும் ளயீஃபையும் தவிர்க்க வேண்டும் என்பதே இந்நூல் உருவான காரணம் என்பதை முன்னுரையில் தெளிவாக விவரிக்கிறார் நூலாசிரியர். எனினும் இந்நூலில் முப்பத்து மூன்று ளயீஃபான ஹதீஸ்கள் இடம்பெறுவதை அவரால் தவிர்க்க இயலவில்லை. இதுவே ளயீஃப்களில் ஏற்கத்தக்கவையும் உள்ளன என்பதற்கான சான்றாகும்.
முன்னுரையில் ‘நான் இமாம் அஹ்மது ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிக் கூறியுள்ளேன்’ என்றும் ‘அதேநேரத்தில் முற்றிலும் ளயீஃப் தரத்திலான ஹதீஸை நான் எடுத்தாளவில்லை' என்றும் நூலாசிரியர் கூறியிருப்பது துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்ற முன்னோர்களின் வழியிலிருந்து அவர் விலகவில்லை என்பதைக் காட்டுகிறது.
நூலின் முன்னுரையை வாசகர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை வாசிக்க வேண்டுகிறேன். இது அவசர உலகம். எதையும் வழவழ என்றில்லாமல் சுருக்கமாகக் கேட்கும் உலகம். சமூக ஊடகங்களில்கூடச் குறுங்காணொலிகள்தாம் (ஷார்ட் வீடியோஸ்) விரும்பிப் பார்க்கப்படுகின்றன. எனவே மார்க்கத்தின் மூலாதார நூல்களும் இவ்வாறான வடிவத்தில் வர வேண்டும் என்று வெளியீட்டாளர்கள் விரும்பியிருக்கலாம். அந்த வகையில் இந்த முயற்சி ஏற்கத்தக்கதே.
இது ஒரு (ரெஃபரென்ஸ் புக்) குறிப்புகளைப் பார்க்கும் நூல், இதற்கு ஆய்வுரை எழுதுவதற்காக இந்நூலை முழுவதுமாகப் படித்துவிட முயன்றேன்; இயலவில்லை, ஓரளவுக்குப் படித்தேன். மொழிபெயர்ப்பும் கலைச்சொல் அகராதியும் சிறப்பாக இருக்கின்றன.
மூன்றுராசிரியர் அரும்பாடுபட்டு பெரும் முயற்சி செய்து இந்நூலை அறிவுலகத்துக்கும் ஆய்வுலகத்துக்கும் முன்வைத்திருக்கிறார். அவரின் கொடையைத் தமிழ் பேசும் மக்களுக்குத் தர முயற்சி செய்திருக்கும் வெளியீட்டாளர்களும் மொழிபெயர்ப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள்.
இவர்களின் சேவைகள் பேரன்பாளன் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றிட துஆ செய்கிறேன். நபிமொழிக்கான இவர்களின் சேவைகள் தொடரட்டும். அறிவு துலங்கட்டும்.
என்றும் அன்புடன்
மௌலவி கே.எம். இல்யாஸ் ரியாஜி
08 12 2022
பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமது
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் வரும் ஓர் ஊர் கடலங்குடி. சின்னஞ் சிறிய ஊர்தான்; ஆனாலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் நிறைந்த ஊர்; அந்த ஊரில் குழாய் போதிக்கான பொருட்களை விற்பனை செய்யும் வணிகத்தைச் செய்து வந்தவர் அப்துல்லாஹ்; அவர்தம் மகனார் முஹம்மது ஃபாதில்; அவர் தமது 15 வயதிலேயே மார்க்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்; அந்த வயதிலேயே வருங்காலத்தில் ஸதக்கத்துல் ஜாரியா நிலையான தர்மம் ஒன்றைச் செய்திடவேண்டுமென்ற சிந்தனையை வல்ல இறையவன் அவரது மனதில் உதிக்கச் செய்திருந்தான்.
மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பையும், ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். பட்டப் படிப்பையும் முடித்த பின்னர் வெளிநாட்டிற்குப் பணி புரியப் புறப்பட்டார் முஹம்மது ஃபாதில்; ஒன்பது ஆண்டுகள் சவூதி அரேபியா ஜெத்தாவில் ஒரு நிறுவனத்தில் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றியுள்ளார்; தற்போது கத்தாரில் ஒரு மருத்துவ நிறுவனத்தில் முதுநிலை கணக்கியல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்; கணக்கியல் துறையில் பட்டயப் படிப்பு பயின்ற மோலில் 15 வயதில் தோன்றிய தமது சிந்தனையை வளர்த்துக்கொண்டே வந்தார்; அது கனியும் காலம் நெருங்கி வருவதனையும் உணர்ந்தார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம் தந்தை அப்துல்லாஹ் மறைவுற்றதும் அவரது பெயரில் ஓர் அறக் கட்டளையை நிறுவி நிலையான தர்மம் செய்யும் தமது பள்ளிப் பருவச் சிந்தனையைச் செயல்படுத்த முனைந்தார் முஹம்மது ஃபாதில்; தமது திட்டத்தைத் தமதுமைத் தாயார் ஹசீனா பேகம் அவர்களிடம் தெரிவித்தார்; கடலங்குடியில் வாழ்க்கைப்பட்ட கிளியனூரைச் சேர்ந்த அந்தத் தாயார் தனயனின் திட்டம் கேட்டுப் பெருமிதம் கொண்டார்; இசைவு தெரிவித்துப் பேருவகையும் கொண்டார்.
முக நூலில் தினம் தினம் நபிமொழி வெளியிடுதலைப் பழக்கமாகக் கொண்டிருந்த முஹம்மது ஃபைஸில் தன் தந்தையின் பெயரால் அப்துல்லாஹ் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார்; அதன்மூலம் பயனுள்ள நூல்கள் பலவற்றை வெளியிடவும், தகுதிமிக்க வசதியற்ற மாணவ-மாணவியருக்குக் கல்வி நிதி உதவி வழங்கவும் அவர் திட்டமிட்டுச் செயல்பாட்டில் இறங்கியுள்ளார்; '31 வயதில் இது தேவைகானா, முதிய வயதில் பார்த்துக் கொள்ளலாமே!' என்று கூறியவர்களின் சொற்களைப் புறந்தள்ளி, 'இளமையை எவ்வாறு கழித்தாய்? செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்?' என்ற ஏகனின் நாளைய வினாக்களுக்கு இன்றே விடை எழுதத் துணிந்துவிட்ட இளைஞர் முஹம்மது ஃபைஸில் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவராவார்; அப்துல்லாஹ் அறக்கட்டளையின் முதல் வெளியீடான மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா இதோ நமது கரங்களில் திகழ்கிறது.
ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ அவர்களால் தொகுக்கப்பெற்ற நபிமொழிப் பேழை மஜ்லிமுஸ். ஸுன்னத்தின் நபவிய்யா எனும் நூலாகும். இமாம் மாலிக், இமாம் அஹ்மத், இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, இமாம் இப்னுமாஜா, இமாம் தாரமீ, இமாம் பைஹகீ, இமாம் இப்னு குஸைமா, இமாம் இப்னு ஹிப்பான், இமாம் ஹாகிம், இமாம் அல்மக்தஸீ ஆகிய 14 பிரபல நபிமொழித் தொகுப்பாளர்களின் நூல்களில் 1,14,194 (ஒரு இலட்சத்து பதினான்காயிரத்து நூற்றுத் தொண்ணூற்று நான்கு) ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் திரும்பத் திரும்பக் குறிக்கப்பெற்றுள்ள ஹதீஸ்களை நீக்கினால் 28,430 ஹதீஸ்கள் கிடைக்கப் பெறுகின்றன.
ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பொருள்களையும், சட்டங்களையும் உள்ளடக்கியதாகவும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒத்த கருத்துகளைக் கொண்ட அல்லது ஒத்த கருத்தை நெருங்கிய ஹதீஸ்களைத் தவிர்த்ததாகவும் தொகுக்கப்பெற்றபோது 28,430 என்ற எண்ணிக்கை 3,921 (மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்று) ஆகக் குறையக் கிடைத்துள்ளது. இவ்வகையில்தான் மூல ஆசிரியர் இந்த நூலைத் தொகுத்துத் தந்துள்ளார். இந்த ஹதீஸ்கள் யாவும் முன்கூறப்பெற்ற 14 தொகுப்பாளர்களின் நூல்களில் இடம் பெற்றவை என்பது மிகவும் குறிக்கப்பெறுவதற்குரியதாகும்.
ஒருவர் உலகியல் சார்ந்த அல்லது மார்க்கம் சார்ந்த ஒரு ஹதீஸைக் காண விழைந்தால் அதற்கான தலைப்பில் அதற்குரிய ஹதீஸைக் கண்டு உள்ளம் கொள்தல் வேண்டும் என்கிற பெரும் நோக்கிலும், ஒரு ஹதீஸ் ஒரு முறைக்கு மேலாக இடம் பெற்றுவிடக் கூடாதென்ற நோக்கிலும், அதே சமயம் அனைத்து ஹதீஸ்களின் தொகுப்பாகவும் இலங்கவேண்டுமென்ற நோக்கிலும், எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும் அந்த துறை சார்ந்த நபிமொழி தேடுவார்க்குக் கிடைக்காமல் போகக்கூடாதென்ற நோக்கிலும் தொகுக்கப்பெற்ற அருமையான நூலாக இந்த நூல், சிறப்புற்று விளங்குகிறது.
கொள்கைகள், கல்வியும் அதன் அடிப்படைகளும், வழிபாடுகள், குடும்பச் சட்டங்கள் இன்றியமையாத் தேவைகள், கொடுக்கல் வாங்கல்கள், இமாமத்-அது சார்ந்த சட்டங்கள், தத்துவங்கள் நற்பண்புகள்-ஒழுக்கங்கள், வரலாறு- மாண்புகள்! குழப்பங்கள் எனப் பத்துப் பெருந்தலைப்புகளில் தொகுக்கப்பெற்றுள்ள பெரிய நூலின் முதல் பகுதியாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் 523 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. பாகம், பிரிவு பாடம் எனும் தலைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு ஹதீஸின் கிதம் ஸஹீஹ், ஹஸன் உள்ளிட்ட அதன்சன் தரமும் குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும். மேலும் அறிவிப்பாளர் யார், எந்த நூலில் இருந்து ஹதீஸ் எடுத்தாளப்பட்டுள்ளது, அந்த நூலில் அந்த ஹதீஸ் இடம்பற்றுள்ள வரிசை எண் முதலியவற்றையும் குறித்திருப்பது எந்த அளவுக்கு மிகத் துல்லியமாகவும், மிகுந்த உழைப்புடனும், நுணுகிய கவனத்தோடும் இந்த நூல் அமைந்து சிறந்து விளங்குகிறது என்பதை உணரவைக்கிறது. மேலும் இந்த நூலில் கலைச்சொல் அகராதி நூல் தொடங்குமுன் அமைந்திருப்பது வரவேற்புக்குரியதாகத் திகழ்கிறது.
ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ அவர்களால் தொகுக்கப்பெற்ற மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நவ்பிய்யா எனும் இந்த நூலை மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார். உலகின் எண்திசைகளிலும் பரவியிருக்கிற அறிவாற்றலை இணைக்கிற பாலங்களில் மிக முக்கியமானது மொழி பெயர்ப்பாரும், மொழிபெயர்ப்பு ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துக் தருவதன்று. மூல ஆசிரியரின் மொழிகளில் பொதிந்திருக்கும் உணர்வையும் உயிரையும் மொழிபெயர்த்தலரின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும்போது அந்த மொழிபெயர்ப்பு ஒரு கலையாகப் பெளரணமிக் கிறது; அவ்வாறின்றி வெறுமனே சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி என ஒரு சடங்காக மொழிபெயர்ப்பு அமைந்து மூல ஆசிரியர் எதை உணர்த்த எழுத்தினோலப் பயன்படுத்தினாரோ அது பயனற்றுப் போகும்போது அந்த மொழிபெயர்ப்பு ஒரு கொலையாக மாறிவிடக்கூடிய பேராபத்தும் நிகழ்ந்துவிட வாய்ப்பிருக்கிறது.
புகழ்பெற்ற ஓர் எழுத்தாளரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பதே எவ்வளவு பெரிய கடின வேலை என்பதை மொழிபெயர்ப்பாசிரியர்கள் நன்குணர்வர்: மூலமொழியையும் மொழிபெயர்ப்பு மொழியையும், படித்துத் தெரிந்து கொண்டுவிட்டாலேயே மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவிட முடியாது; இரு மொழிகளிலும் ஆழ்ந்து தோய்ந்த, உணர்ந்து தெரிந்த பேரறிவு மொழியெயர்ப்பாசிரியரிடம் இருக்க வேண்டுவது அவசியமாகும்; சாதாரண மொழிபெயர்ப்புக்கே இத்தகைய பெரும் தகுதி தேவையெனில் அகில உலகத்திற்கும் அருட்கொடையாக வந்துதித்த இறைத்தூதர் அண்ணல் நம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமுத மொழிகளை மொழிபெயர்ப்பதென்றால் எத்தகைய மொழிவளப் பேரறிவும் உயிர்ப்போடு உணர்ந்துகிற பெருஞானமும் தேவை என்பதைச் சிந்திப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும், இறையருளால் அத்தகையத் தகுதியை மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பெற்று இலங்குகிறார் என்பதை இந்த நூலின் வாயிலாகவும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
ஜவாஹிருல் வல்ஸீஷான் (முத்தும் பவளமும்), இஸ்லாமிய இல்லறம், நபிவழி மருத்துவம், இப்னுமாஷா, கனவூந் நஸாயீ, வாழ்க்கையை அனுபவி (என்னாப் யுஸர் லைஃப்), புஹ்ல்லுஸ் ஸஆதா, ரவ்ளாததுல் ஜன்னாத், நபிமார்கள் வரலாறு முதலிய மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழகத்து நல்லுலகுக்கு நற்கொனௌ மௌலவி அப்துல் ஹாதி பாகவி தந்துள்ளார்; அவை அனைத்தும் அவரது மொழிபெயர்ப்பு ஞானத்திற்குச் சான்று பகர்கின்றன; இறைமறையில் இறைநம்பிக்கை கொண்டோரே!' என இறைவன் அழைக்கும் 88 இடங்களை எடுத்துரைத்து அருமையான நூல் எழுதிய சிறப்பும் அவருக்குண்டு; 'இனியா திசைகள் மாதி இதழின் துணையாசிரியர் பொறுப்பில் மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதிடும் சிறந்த எழுத்தாளராகவும் அவர் திகழ்கிறார்: 'பூபாள இராகங்கள்' எனும் அவரது கவிதை நூல் அவரைச் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது: இதழாசிரியராக, ஊடகவியலாளராக, கட்டுரை ஆசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, பன்னூலாசிரியராக, மார்க்க அறிஞராக, மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியாளற்றிடும், சேவையாளராகத் திகழும் மெளலவி டாக்டர் நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி. அவர்களின் மொழியாக்கம் பேரறிவின் சாட்சியமாக இந்த நூல் அமைத்துள்ளதெனலாம், வாசிப்பகைச் சுவாசமாக நற்று, வாசிந்ததை இதயத்தில் விதைத்து அதன் எதிரொலிப்பைத் தனது அன்றாடச் செயல்பாடுகளில் பயன்படுத்துகிற சமுதாயமே மேம்பாடு அடைய முடியும்; இறைமறையும், நபிமொழியும் நம்முயிர்க் கண்களாகும்;
ஹதீஸ்களைத் தொகுத்து அங்கை நெல்லியாகத் தரும் இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகம் படித்துப் பயனுகர வேண்டும். இந்நூலினைப் படிப்போர் மற்றவர்களுக்கும் வாங்கித் தந்து படிக்கத் தூண்டிப் பயனுறச் செய்ய வேண்டும்; மூல ஆசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர், பதிப்பாளர், இந்நூலைப் படிப்போர் ஆக அனைவர்மீதும் வல்ல இறையவன் நல்லருள் என்றென்றும் நிறைவதாக...
‘நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் செய்துள்ள இந்தப் பணி முழுமையடைந்துவிட்டது என்றோ மற்ற பணிகள் இதனுடன் நிற்க முடியாது என்றோ வாதிட மாட்டேன்’ என்ற மூல ஆசிரியரின் கருத்து நம் அனைவர் நெஞ்சிலும் ஆழமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதாகும். இதன் அடிப்படையில் நமது பணிகள் மறுமையில் விளைச்சலின் நன்மை பெருகும் வகையில் இம்மையில் விதைக்கப்படுவது தொடர்வதாக...
மூல நூலாசிரியர் ஸாலிஹ் பின் அஹ்மத் அல்அலி அவர்களின் மறுமைக்காக இறைஞ்சி, மொழிபெயர்ப்பாசிரியர் நூ.அப்துல் ஹாதி பாகவி, பதிப்பாளர் முஹம்மது ஃபாரூக் ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறோம். மற்றும் அப்துல்லாஹ் அவர்கள் மண்ணறையில் மௌனமாகிப்போன உறவுகளும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சுவனம் பெற்றிடவும் இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.
அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறிய பணிகள் தொடர்வதாக...
அன்புடன்
சேமுமு. முகமதலி
27/58, நரசிம்மபுரம், மயிலை, சென்னை-600004
கைப்பேசி: 94441 65153
28 11 2022
முனைவர் மு.அப்துல் ரசாக்
தலைவர் தமிழ்த்துறை
புதுக்கல்லூரி, சென்னை-14
இஸ்லாத்தின் இரண்டு முக்கிய அடிப்படை ஆதாரங்கள் ஒன்று குர்ஆன், இரண்டாவது ஹதீஸ், முதல் பிரமாணமான குர்ஆனின் வியாக்கியானமாகவும் ஹதீஸ் திகழ்கிறது.
குர்ஆனைச் செயல்வடிவத்தில் விளக்கம் கூறி, மக்களுக்குக் கற்பிக்க அல்லாஹ் அனுப்பிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது வாழ்க்கையால் எழுதிய நடைமுறைச் சாத்தியமான அதிகாரபூர்வ வியாக்கியானம்தான் ஹதீஸாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இதோ படத்தில் உள்ள தமிழ் உரை (Text):
அல்லாஹ்வுதான் படைப்புகளின் மக்ஸத் இலக்கு என்றால் அந்த இலக்கை அடைவதற்கான ஒரே ஒரு மார்க்கம்தான் குர்ஆன். சுன்னத்தின் வெளிச்சம் இல்லாமல் குர்ஆனியக் கல்வி சாத்தியமன்று.
சுன்னாவை நிராகரித்து குர்ஆனை ஏற்றுக்கொள்வது என்பது, குர்ஆனின் எழுத்தை ஏற்றுக்கொண்டு அதன் அர்த்தத்தை மறுப்பதற்கு நிகரானது.
14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்திற்கு இருந்த உயிர்ப்பும், உள்ளமும் எவை என்று அதன் வேர்களைத் தேடினால், இன்றைய நமது பலவீனங்களின் இழிவுநிலையின் காரணங்களைக் கண்டடையலாம், இஸ்லாத்தின் இரும்புக்கோட்டைதான் குர்ஆனும் ஹதீஸும், ஒன்றை உதாசீனப்படுத்தினால் அது காகிதக் கோட்டையாகிவிடும்.
நபிகளார் இறுதித்தூதர் மட்டுமல்லர். அகிலத்துக்கு அருட்கொடையும்தான். ஹதீஸை மறுப்பது இறைமார்க்கத்தை மறுப்பதாகிவிடும்.
ஹதீஸ் எனும் உயிர்மொழித் தொகுப்பு, மிக வியப்பான அறிவியல் பூர்வமான பாதுகாப்புக் கவசங்களோடு காலந்தோறும் காப்பாற்றப்பட்டுள்ளது.
அந்த வரலாற்று நிகரற்றது...
இறைநம்பிக்கையாளர்களே, அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், இன்னும் (அவனது) தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையவருக்கும் கீழ்ப்படியுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால் அல்லாஹ்விடமும், இறுதிநாளையும் நீங்கள் நம்பிக்கை கொள்பவராக இருந்தால் - அதனை அல்லாஹ்வின் பக்கமும் (அவன்) தூதரின் பக்கமும் திருப்பிவிடுங்கள்; இது (உங்களுக்கு) மிகச்சிறந்ததாகும், மிக அழகிய முடிவாகவும் இருக்கும் (4:59).
நான்கு அடிப்படை விதிகளைக் குறிக்கும் மேற்குறிப்பிட்ட இறைவசனத்துக்கான விளக்கம்தான், இந்த ஹதீஸ் தொகுப்பு. இதனை முயன்று உருவாக்கிய முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள், இறைவன் இத்திருப்பணியைத் திருத்திக்கொள்வானாக. ஆமீன்.
மு.அப்துல் ரசாக்
சென்னை
11 11 2022
நூல் விவரம்
நூல்: மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா (தயாரிப்பா)
மூலம்: தமிழாக்கம் (பாகம் ஒன்று)
அரபு மூலம்: ஸாலிஹ் பின் அஹ்மது அஷ்ஷாமி
தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
நூல் வடிவமைப்பு: மௌலவி காஷா முஹ்யித்தீன் மன்பஈ
பதிப்பு: முதல் பதிப்பு, ஜனவரி 2023
பக்கங்கள்: 416
பிரதிகள்: 1000
விலை: ரூ. 450/-
அச்சிட்டோர்: ஷிரிலிஜி, சென்னை - 8
வெளியீடு:
அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ்
ஹாஹா வணிக வளாகம், எண்: 2, தரங்கை சாலை,
(மஸ்ஜிதே மஃமூர் அருகில்)
மயிலாடுதுறை-609 001
மின்னஞ்சல்: info@abdullahpublications.com
செல்பேசி: +91 99522 31434