சொர்க்கத்தின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَكْثَرُ الْأَنْبِيَاءِ تَبَعًا يَوْمَ الْقِيَامَةِ وَأَنَا أَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ . 219
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நானே மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன் ; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ثُمَّ قَرَأَ: فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ . 220
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உயர்வான அல்லாஹ் , " என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத , எந்தக் காதும் கேட்டிராத , எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன் . ( சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து ) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை , ( அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே ) சொற்பமானவையே ஆகும் ` எனக் கூறுகின்றான் `` என்று சொல்லிவிட்டு , பிறகு , “ அவர்கள் செய்துகொண்டிருந்த ( நற் ) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் `` எனும் (32:17ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் .
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا . 221
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது . அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدْ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُونَ وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا . 222
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ( மக்கள் ஒன்றுகூடும் ) சந்தை ஒன்று உண்டு . அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள் . அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் ( கஸ்தூரி மண்ணை ) வாரிப் போடும் . உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள் . பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள் . அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் , “ எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே !`` என்று கூறுவர் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தாம் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள் `` என்று கூறுவர் .
(ق) عَنْ أبو موسى الأشعري: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيلًا فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الْآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمْ الْمُؤْمِنُونَ وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ كَذَا آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ . 223
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது . அதன் அகலம் அறுபது மைல்களாகும் . அதன் ஒவ்வொரு மூலையிலும் ( இறைநம்பிக்கையாளருக்கு ) துணைவியர் இருப்பார்கள் . ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது . இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர் . மேலும் , இரு சொர்க்கங்கள் உள்ளன . அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை . ( வேறு ) இரு சொர்க்கங்கள் உள்ளன . அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை . " அத்ன் ` எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் , தங்கள் இறைவனைக் காண்பதற்கு , அவன் மீதுள்ள " பெருமை ` எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது .
(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ . 224
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சைஹான் , ஜைஹான் , ஃபுராத் , நீல் ( நைல் ) ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும் .
(خ) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ قَالَ أَتَيْتُ عَلَى نَهَرٍ حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا فَقُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ . 225
தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன் . அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன . அப்போது நான் , “ ஜிப்ரீலே , இது என்ன ?`` என்று கேட்டேன் . “ இது அல்கவ்ஸர் `` என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ . 226
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிலிருந்து , “ அல்லாஹ்வின் அடியாரே ! இது ( பெரும் ) நன்மையாகும் ! ( இதன் வழியாக நுழையுங்கள் !)” என்று அழைக்கப்படுவார் . ( தமது உலக வாழ்வின் போது ) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; அறப்போர் புரிந்தவர்கள் " ஜிஹாத் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் " ரய்யான் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; தர்மம் செய்தவர்கள் " ஸதகா ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் !`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே ! எனவே , எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ! நீரும் அவர்களுள் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் !`` என்றார்கள் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَوَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ فَأَسْرَعَ وَبَذَرَ فَتَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ وَتَكْوِيرُهُ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ يَا رَسُولَ اللَّهِ لَا تَجِدُ هَذَا إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ فَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ رَسُولُ اللَّهِ . 227
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கிராமவாசி ஒருவர் தம்மிடம் அமர்ந் திருக்க ( பின்வரும் நிகழ்ச்சியை ) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள் : சொர்க்கவாசிகளுள் ஒரு மனிதர் , தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார் . அதற்கு இறைவன் அவரிடம் , “ நீ விரும்பிய ( இன்பமான ) நிலையில் ( இப்போது ) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் , “ ஆம் . ( நான் விரும்பியபடியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் .) ஆனால் , நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் `` என்று கூறுவார் . ( இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான் .) அந்த மனிதர் விதை தூவி விடுவார் . கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும் ; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும் . அப்போது இறைவன் , “ எடுத்துக் கொள் , ஆதமின் மகனே ! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது `` என்று கூறுவான் . ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற ) அந்தக் கிராமவாசி , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! அந்த மனிதர் குறைஷியாகவோ ( மக்கா வாசியாகவோ ) அன்ஸாரியாகவோ ( மதீனாவாசியாகவோ ) தான் இருக்க முடியும் . அவர்கள் தாம் விவசாயிகள் . நாங்களோ விவசாயிகள் அல்லர் `` என்று கூறினார் . இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்து விட்டார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتْفِلُونَ وَلَا يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمْ الذَّهَبُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَمَجَامِرُهُمْ الْأَلُوَّةُ الْأَنْجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمْ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ . 228
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ( ஒளி வீசும் ) சந்திரனைப் போன்று ( பிரகாசமாகவும் அழகாகவும் ) தோற்றமளிப்பார்கள் . பிறகு , அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள் . அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள் ; எச்சில் துப்பவும் மாட்டார்கள் ; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள் . அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை . அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும் . அவர்களுடைய ( நறுமணப் புகை போடும் ) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப் படும் . அகில் என்பது நறுமணக் குச்சியாகும் . அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர் . ( சொர்க்கவாசிகளான ) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள் . அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தில் வானத்தில் ( முட்டும் விதத்தில் ) அறுபது முழம் உயரமிருப்பார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ . 229
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் , பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி ( விசாரணையின்றிச் சொர்க்கத்துக்குள் ) நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ ரளியல்லாஹு அன்ஹு தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வே ! இவரையும் அவர்களுள் ஒருவராக ஆக்குவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . பிறகு அன்ஸாரிகளுள் ஒருவர் எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ . 230
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றிச் சொர்க்கத்தில் நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . மக்கள் , “ அவர்கள் யார் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்கள் எத்தகையவர்கள் எனில் , ஓதிப்பார்க்க மாட்டார்கள் ; பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள் ; ( நோய்க்காகச் ) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள் ; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள் `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَلِكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ . 231
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ( சுமார் நாற்பது பேர் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ( தோல் ) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம் . அப்போது அவர்கள் " சொர்க்கவாசிகளுள் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " சொர்க்கவாசிகளுள் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . அவர்கள் “ சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக ( என் சமுதாயத்தாரான ) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் . அதற்குக் காரணம் , சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது . இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான் ; அல்லது செவலைக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الْأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلٍ مَا بَيْنَهُمْ". قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ: "بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ . 232
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : " சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை , அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று ( ஆர்வத்துடன் ) பார்ப்பார்கள் . ( அந்தஸ்தில் ) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு ( ஏக்கம் கொண்டுதான் ) அப்படிப் பார்ப்பார்கள் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) நபித்தோழர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அவை நபிமார்கள் தங்குமிடங்கள்தாமே ? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா ?`` என்று கேட்டனர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை . என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக ! அ( ங்கே தங்குப ) வர்கள் அல்லாஹ்வின் மீது ( உறுதியான ) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர் `` என்று பதிலளித்தார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ غُرْفَةً يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِمَنْ أَلَانَ الْكَلَامَ وَأَطْعَمَ الطَّعَامَ وَبَاتَ لِلَّهِ قَائِمًا وَالنَّاسُ نِيَامٌ . 233
அப்துல்லா ஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ திண்ணமாகச் சொர்க்கத்தில் ஓர் அறை உண்டு . அதன் வெளிப்புறம் உட்புறத்திலிருந்து காணப்படும் . அதன் உட்புறம் வெளிப்புறத்திலிருந்து காணப்படும் ” என்று அல்லாஹ்வின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு , “ அது யாருக்கு அல்லாஹ்வின் தூதரே !” என்று கேட்டார்கள் . “ யார் மென்மையாகப் பேசி , ( பசித்தவருக்கு உணவு கொடுத்து , மக்கள் தூங்கும் வேளையில் அல்லாஹ்வுக்காக நின்று வழிபட்டாரோ அவருக்குரியது ” என்று கூறினார்கள் .
(م) عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ أَهْلُ الْجَنَّةِ فِيهَا وَيَشْرَبُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَبُولُونَ وَلَكِنْ طَعَامُهُمْ ذَاكَ جُشَاءٌ كَرَشْحِ الْمِسْكِ يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالْحَمْدَ كَمَا تُلْهَمُونَ النَّفَسَ 234
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள் ; பருகுவார்கள் . மலம் கழிக்கமாட்டார்கள் . மூக்குச் சிந்தவுமாட்டார்கள் . சிறுநீர் கழிக்கவு மாட்டார்கள் . அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று ஏப்பமாக வெளியேறும் . மூச்சு விடுமாறு அகத் தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும் .
(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ وَنُودُوا أَنْ تِلْكُمْ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ . 235
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ , அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர் ) பொது அறிவிப்பாளர் ஒருவர் , “( இனி ) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள் ; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள் . நீங்கள் உயிருடன்தான் இருப்பீர்கள் ; ஒருபோதும் இறந்துபோய் விடமாட்டீர்கள் . இளமையோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள் . நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள் `` என்று அறிவிப்புச் செய்வார் . இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் , “ இதுதான் சொர்க்கம் ; நீங்கள் ( உலகில் ) நற்செயல் புரிந்து கொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் `` (7:43) எனக் கூறுகின்றான் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ . 236
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள் . அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும் .
(خ ) عِمْرَانُ بْنُ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنْ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ . 237
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இந்த ) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறிச் சொர்க்கம் செல்வார்கள் . அவர்கள் " ஜஹன்னமிய்யூன் ` ( நரக விடுதலை பெற்றோர் ) என்று அழைக்கப்படுவார்கள் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ تَعَالَى : مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ ، فَيَخْرُجُونَ قَدِ امْتَحَشُوا ، وَعَادُوا حُمَمًا ، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ، أَلَمْ تَرَوْا أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً . 238
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் விசாரணை முடிந்தபின் ) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் “ எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் ( இறைநம்பிக்கை ) உள்ளதோ அவரை ( நரகத்திலிருந்து ) வெறியேற்றி விடுங்கள் `` என்று கூறுவான் . உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள் . அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள் . பின்னர் அவர்கள் " நஹ்ருல் ஹயாத் ` எனும் ( ஜீவ ) நதியில் போடப்படுவார்கள் . உடனே அவர்கள் " சேற்று வெள்ளத்தில் ` அல்லது " வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் ` விதை முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறிவிடுவார்கள் . அந்த வித்து ( விலிருந்து வரும் புற்பூண்டுகள் ) மஞ்சள் நிறத்தில் ( பார்ப்பதற்கு அழகாகவும் , காற்றில் ) அசைந்தாடியதாக ( வும் ) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா ?
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَمِنُوا فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ فِي الدُّنْيَا بِأَشَدَّ مُجَادَلَةً لَهُ مِنْ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمْ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ . 239
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுப் பாதுகாப்பாக இருந்தால் , இந்த உலகில் சத்தியத்தின் மீதிருந்து நரகத்தில் நுழைந்துவிட்ட தங்கள் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை . அவர்கள் ( பின்வருமாறு ) கூறுவார்கள் : “ எங்கள் இறைவா ! எங்கள் சகோதரர்கள் எங்களுடன் தொழுதார்கள் , எங்களுடன் நோன்பு நோற்று , எங்களுடன் ஹஜ் செய்தார்கள் , ( அப்படியிருக்கையில் ) நீ ( எவ்வாறு ) அவர்களை நரகத்தில் நுழையச் செய்தாய் ?” அப்போது அவன் சொல்வான் : “ நீங்கள் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள் ,” அவர்கள் அவர்களிடம் வந்து அவர்களின் தோற்றங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் , அவர்களின் தோற்றங்களை நெருப்பு எரிக்காது , அவர்களுள் சிலரை நரக நெருப்பு அவர்களின் கெண்டைக்கால்கள் வரை உண்டிருக்கும் . அவர்களுள் சிலரை அவர்கள்தம் கணுக்கால்கள் வரை உண்டிருக்கும் . எனவே அவர்கள் அவர்களை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு , “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ” என்று சொல்வார்கள் . பின்னர் அவன் கூறுவான் : “ எவரது உள்ளத்தில் தீனார் எடை அளவு ஈமான் இருக்கிறதோ அவர்களை வெளியே எடுங்கள் . பின்னர் யாருடைய உள்ளத்தில் அரை தீனாரின் எடை அளவுக்கு ஈமான் உள்ளதோ ( அவர்களை வெளியே எடுங்கள் ).” இறுதியில் “ எவரது உள்ளத்தில் அணுவின் எடை அளவு ( ஈமான் உள்ளதோ அவர்களை வெளியே எடுங்கள் )” என்று கூறுவான் . அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இதை நம்பாதவர் ( பின்வரும் ) இந்த வசனத்தைப் படிக்கட்டும் : திண்ணமாக அல்லாஹ் அணுவின் எடை அளவுக்கும் அநீதி இழைக்க மாட்டான் , மேலும் ஒரு நல்ல செயல் இருந்தால் , அவன் அதை இரட்டிப்பாக்கிவிடுவான் . அவன் தன்னிடமிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கிறான் . (4: 40) அறிவிப்பாளர் கூறினார் : “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ; சிறிதளவு நன்மை உள்ள எவரும் நரகத்தில் இல்லை ” என்று சொல்வார்கள் . பின்னர் அல்லாஹ் : “ வானவர்கள் பரிந்துரை செய்தார்கள் ; நபிமார்கள் பரிந்துரை செய்தார்கள் ; இறைநம்பிக்கையாளர்கள் பரிந்துரை செய்தார்கள் ; இரக்கமுள்ளவர்களில் மிகவும் இரக்கமுள்ளவன் ( ஆகிய நான் ) எஞ்சியிருக்கிறேன் என்று கூறியவாறு , நரக நெருப்பிலிருந்து ஒரு கைப்பிடி ( அல்லது இரண்டு கைப்பிடி ) தொகையினரை எடுத்துக்கொள்வான் . அவர்கள் இறைவனுக்காகச் சிறிதளவும் ஒருபோதும் நன்மை செய்யாதவர்கள் , அவர்கள் கரிக்கட்டைகளாக மாறிப்போயிருப்பார்கள் . ஜீவநீர் என்று அழைக்கப்படுகிற தண்ணீருக்கு அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் , அது அவர்கள்மீது ஊற்றப்படும் . அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று வளர்வார்கள் , அவை முத்துக்கள் போல அவர்களின் உடலிலிருந்து வெளியேறும் , மேலும் அவர்களின் கழுத்தில் ஒரு மோதிரம் இருக்கும் : அவர்கள்தாம் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்பட்டவர்கள் , மேலும் அறிவிப்பாளர் கூறினார் : “ சொர்க்கத்தில் நுழையுங்கள் ” என்று அவர்களிடம் கூறப்படும் , அப்போது “ நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அல்லது பார்த்தீர்களோ , அது இதைவிட உங்களுக்குச் சிறந்தது ” என்று அல்லாஹ் கூறுவான் . அதற்கு அவர்கள் , “ எங்கள் இறைவா , இதைவிடச் சிறந்தது என்ன ?” என்று கேட்பார்கள் : “ நான் உங்கள்மீது திருப்தி அடைகிறேன் ; நான் ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் ” என்று அல்லாஹ் கூறுவான் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ رَجُلٌ يَخْرُجُ مِنْ النَّارِ حَبْوًا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا أَوْ إِنَّ لَكَ عَشَرَةَ أَمْثَالِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي أَوْ أَتَضْحَكُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ قَالَ فَكَانَ يُقَالُ ذَاكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً . 240
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு ) கூறினார்கள் : நரகவாசிகளுள் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் , சொர்க்கவாசிகளுள் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன் . நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர் . அவரிடம் அல்லாஹ் “ நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்பான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . உடனே அவர் திரும்பி வந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அல்லாஹ் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்று ( மீண்டும் ) சொல்வான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . ஆகவே , அவர் திரும்பிவந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அவன் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் . ஏனெனில் , " உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு ` அல்லது " உலகத்தைப் போன்று பத்து மடங்கு ` ( இடம் சொர்க்கத்தில் ) உனக்கு உண்டு `` என்று சொல்வான் . அதற்கு அவர் " அரசனாகிய நீ என்னைப் " பரிகாசம் செய்கிறாயா ?` அல்லது " என்னை நகைக்கின்றாயா ?` என்று கேட்பார் . ( இதைக் கூறியபோது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன் . அறிவிப்பாளர்களுள் ஒருவர் கூறுகிறார் : இவரே சொர்க்கவாசிகளுள் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டு வந்தது .
(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللَّهِ فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ أَيْ رَبِّ إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا فَلَا تُعِدْنِي فِيهَا فَيُنْجِيهِ اللَّهُ مِنْهَا . 241
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறுதிக் கட்டத்தில் ) நான்கு பேர் ( நரக ) நெருப்பிலிருந்து வெளியேறுவார்கள் . அந்நால்வரும் அல்லாஹ்வின்முன் நிறுத்தப்படுவார்கள் . அப்போது அவர்களுள் ஒருவர் ( நரகத்தை நோக்கித் ) திரும்பி , “ இறைவா ! இ( ந்தக் கொடிய நரகத் ) திலிருந்து என்னை நீ வெளியேற்றிய பின் மீண்டும் அதற்குள் என்னை அனுப்பிவிடாதே !`` என்று கூறுவார் . அதையடுத்து அல்லாஹ் அதிலிருந்து அவரைக் காப்பாற்றுவான் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا . 242
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( மறுமையில் ) சொர்க்கவாசிகளை நோக்கி , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “ எங்கள் அதிபதியே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் `` என்று பதிலளிப்பார்கள் . அப்போது அல்லாஹ் " திருப்தி அடைந்தீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “ உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்கியிராத ( அருட்செல்வங்கள் , இன்பங்கள் ஆகிய ) வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா ?`` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் “ அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன் `` என்பான் . அவர்கள் “ அதிபதியே ! அதைவிடச் சிறந்தது எது ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அல்லாஹ் “ உங்கள்மீது என் திருப்தியை அருளுகிறேன் . இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் `` என்று கூறுவான் .
(م) عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ . 243
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுஹைப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது ( அவர்களிடம் ) அல்லாஹ் , “ உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா ? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் நுழையச் செய்யவில்லையா ( இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும் )?`` என்று கேட்பார்கள் . அப்போது அல்லாஹ் , ( தன்னைச் சுற்றிலும் இருக்கும் ) திரையை விலக்கி ( அவர்களுக்கு தரிசனம் தந்தி ) டுவான் . அப்போது தம் இறைவனைக் ( காணும் அவர்களுக்கு அவனைக் ) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ مِائَةُ عَامٍ . 244
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் ( தரஜா ) உள்ளன . ஒவ்வொரு படித்தரத்திற்கும் இடையே நூறாண்டுகள் ( தொலைதூரம் ) உள்ளது .
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ الْأَرْضِ وَالسَّمَاءِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً وَمِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ . 245
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன . ( அவற்றில் ) ஒவ்வோர் இரண்டு படித்தரங்களுக்கு இடையேயும் பூமிக்கும் வானுக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது . ஃபிர்தவ்ஸ் என்பது ( சொர்க்கத்தின் படித்தரங்களில் ) மிக உயர்ந்த படித்தரமாகும் . அதிலிருந்தே நான்கு சொர்க்க ஆறுகள் பாய்கின்றன ; அதற்கு மேலேதான் அர்ஷ் ( இறையாசனம் ) இருக்கிறது . எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் கோரினால் , அவனிடம் ஃபிர்தவ்ஸ் எனும் அந்தச் சொர்க்கத்தையே கோருங்கள் .
عن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ مَا يُقِلُّ ظُفُرٌ مِمَّا فِي الْجَنَّةِ بَدَا لَتَزَخْرَفَتْ لَهُ مَا بَيْنَ خَوَافِقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَوْ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَ فَبَدَا أَسَاوِرُهُ لَطَمَسَ ضَوْءَ الشَّمْسِ كَمَا تَطْمِسُ الشَّمْسُ ضَوْءَ النُّجُومِ . 246
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்திலுள்ள அருட்கொடைகளில் ஒரு நகம் சுமக்கும் அளவிலான ( மிகச் சிறிய ) ஒன்று ( இவ்வுலகில் ) வெளிப்பட்டால்கூட , அதனால் வானங்களுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள பகுதிகள் எழிலாகிவிடும் . ( அவ்வாறே ,) சொர்க்கவாசிகளுள் ஒருவர் ( பூமியை ) எட்டிப்பார்க்க , அவருடைய அணிகலன்கள் தென்படுமானால் , விண்மீன்களின் ஒளியைச் சூரியன் மங்கச்செய்வதைப் போன்று . சூரிய ஒளியையே அவை மங்கச் செய்துவிடும் .
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا . 247
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் ( கிடைத்துவிட்டால் ) அது இந்தப் பூமியையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தது .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُبْعَثُ أَهْلُ الْجَنَّةِ عَلَى صُورَةِ آدَمَ فِي مِيلَادِ ثَلَاثَةٍ وَثَلَاثِينَ سَنَةً ، جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ ، ثُمَّ يُذْهَبُ بِهِمْ إِلَى شَجَرَةٍ فِي الْجَنَّةِ ، فَيُكْتَبُونَ فِيهَا ، لَا تَبْلَى ثِيَابُهُمْ ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ . 248
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் ஆதமின் தோற்றத்தில் எழுப்பப்படுவார்கள் . அவர்கள் தம் உடலில் உரோமங்களற்ற , கண்களில் அஞ்சனம் தீட்டப்பெற்ற , முப்பத்து மூன்று வயதுடைய இளவல்களாகச் சொர்க்கத்திற்குள் நுழைவார்கள் . பிறகு அவர்கள் சொர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள் . அங்கே “ அவர்களுடைய ஆடைகள் இற்றுப்போகா ; அவர்களுடைய இளமைப்பருவம் முடிந்துபோகாது ” என்று எழுதப்படும் .