2-باب : فضل تعاهد القرآن
பாடம் 2

பாடம்: 2. திருக்குர்ஆனைச் சிரமப்பட்டு ஓதுவதன் சிறப்பு

ஹதீஸ் 464 அத்தியாயம் 10 பாடம் 2

(ق) عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَمَثَلُ الَّذِي يَقْرَأُ وَهُوَ يَتَعَاهَدُهُ وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ . 464

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : குர்ஆனை மனனமிட்டு ( ச் சிரமமின்றி ) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க ( ளான வானவர்க ) ளைப் போன்றவராவார் . குர்ஆனை ( மனனம் செய்திராவிட்டாலும் அதனைச் ) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு .

Reference: ( புகாரீ : 4937, முஸ்லிம் : 798)
ஹதீஸ் 465 அத்தியாயம் 10 பாடம் 2

(ق) عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ . 465

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ( ப் பார்த்தோ மனப்பாடமாகவோ ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம் , கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டக உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது . அதனை அவர் கண்காணித்து வந்தால் தம்மிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம் . அதை அவிழ்த்துவிட்டு விட்டாலோ அது ஓடிப்போய்விடும் .

Reference: ( புகாரீ : 5031, முஸ்லிம் : 789)
ஹதீஸ் 466 அத்தியாயம் 10 பாடம் 2

(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ . 466

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் `` என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும் . வேண்டுமானால் , " மறக்க வைக்கப்பட்டு விட்டது ` என்று அவர் கூறட்டும் ! குர்ஆனைத் தொடர்ந்து ( ஓதி ) நினைவுபடுத்தி வாருங்கள் . ஏனெனில் , ஒட்டகங்களைவிட வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் .

Reference: ( புகாரீ : 5032, முஸ்லிம் : 790)
ஹதீஸ் 467 அத்தியாயம் 10 பாடம் 2

عَنْ السَّائِبُ بْنُ يَزِيدَ : أَنَّ شُرَيْحًا الْحَضْرَمِيَّ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَسَّدُ الْقُرْآنَ . 467

சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜுரைஹ் அல்ஹள்ரமீ என்பாரைக் குறித்துக் கூறப்பட்டது . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ குர்ஆனைத் தலையணையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் ” என்று கூறினார்கள் .

Reference: ( நஸாயீ : 1782) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .