11-باب : المكي والمدني
பாடம் 11

பாடம்: 11. மக்கி, மதனி (மக்காவைச் சார்ந்தது, மதினாவைச் சார்ந்தது)

ஹதீஸ் 455 அத்தியாயம் 9 பாடம் 11

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : مَا كَانَ : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُنْزِلَ بِالْمَدِينَةِ ، وَمَا كَانَ : يَا أَيُّهَا النَّاسُ فَي مَكَّةَ . 455

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எதுவெல்லாம் யாஅய் ‎ யுஹல்லதீன ஆமனூ ( இறைநம்பிக்கைகொண்டோரே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மதீனாவில் அருளப்பட்டது . எதுவெல்லாம் யாஅய்யுஹன்னாஸ் ( மக்களே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மக்காவில் அருளப்பட்டது .

Reference: ( ஹாகிம் : 4295) மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : நாங்கள் மக்காவில் முஃபஸ்ஸலான அத்தியாயங்களை பல ஆண்டுகளாக ஓதிவருகிறோம் . அவற்றில் யாஅய் ‎ யுஹல்லதீன ஆமனூ ( இறைநம்பிக்கை கொண்டோரே ) என்று ( எந்த வசனமும் ) இருந்ததில்லை . ( ஹாகிம் : 4296) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் உள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . முந்தைய அறிவிப்பாளர் தொடர் குறித்து விமர்சனம் எதுவும் செய்யவில்லை .