8-باب : القراء من الصحابة
பாடம் 8

பாடம்: 8. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சிபெற்ற நபித்தோழர்கள்

ஹதீஸ் 446 அத்தியாயம் 9 பாடம் 8

(ق) عَنْ مَسْرُوقٍ قَالَ ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لَا أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ . 446

மஸ்ரூக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது . அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் எத்தகைய மனிதரென்றால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் , அபூ ஹுதைஃபாவின் ( முன்னாள் ) அடிமையான சாலிம் , உபை பின் கஅப் , முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள் ` என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் `` என்று சொன்னார்கள் . அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் , “ அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா , முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா ( இவர்கள் இருவருள் யாரை முதலில் குறிப்பிட்டார் ) என்று எனக்குத் தெரியாது `` எனக் கூறுகிறார்கள் .

Reference: ( புகாரீ : 3758, முஸ்லிம் : 2464)
ஹதீஸ் 447 அத்தியாயம் 9 பாடம் 8

(ق) عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنْ الْأَنْصَارِ أُبَيٌّ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأَبُو زَيْدٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ . 447

கதாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் ( கொண்ட குழுவினர் ) குர்ஆனை ( மனனம் செய்து ) திரட்டினார்கள் . அவர்கள் அனைவருமே அன்ஸாரிகள் ஆவர் . 1. உபை பின் கஅப் . 2. முஆத் பின் ஜபல் . 3. அபூஸைத் . 4. ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோர்தாம் அவர்கள் `` என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . நான் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அபூஸைத் என்பவர் யார் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவர் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 3810, முஸ்லிம் : 2465) புகாரீ நூலின் மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் குர்ஆனை ( க் கேட்டு ) த் திரட்டியிராத நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்கள் . ( அந்த நால்வர் :) 1. அபுத்தர்தா . 2. முஆத் பின் ஜபல் . 3. ஸைத் பின் ஸாபித் . 4. அபூஸைத் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர் . நாங்களே ( என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவரான ) அபூஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வாரிசானோம் . ( அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை .) ( புகாரீ : 5004).
ஹதீஸ் 448 அத்தியாயம் 9 பாடம் 8

(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ قَالَ وَسَمَّانِي قَالَ نَعَمْ فَبَكَى. 448

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அல்லாஹ் உங்களுக்கு , “ வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை ...`` என்னும் ( திருக்குர்ஆனின் 98ஆம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான் `` என்று சொன்னார்கள் . அதற்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு , “ என் பெயரைக் குறிப்பிட்டா ( அப்படிச் ) சொன்னான் ?`` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டு உபை பின் கஅப் அவர்கள் ( ஆனந்தம் மேலிட்டு ) அழுதார்கள் .

Reference: ( புகாரீ : 3809, முஸ்லிம் : 799)