17-باب : الوقوع في الهرم
பாடம் 17

பாடம்: 17. தள்ளாமையில் தள்ளப்படுதல்

ஹதீஸ் 287 அத்தியாயம் 7 பாடம் 17

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مُثِّلَ ابْنُ آدَمَ وَإِلَى جَنْبِهِ تِسْعٌ وَتِسْعُونَ مَنِيَّةً إِنْ أَخْطَأَتْهُ الْمَنَايَا وَقَعَ فِي الْهَرَمِ حَتَّى يَمُوتَ . 287

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஷ்ஜிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகனுக்கு ( மனிதனுக்கு ) அருகில் தொண்ணூற்றொன்பது மரண ( த்திற்கான காரண ) ங்கள் இருக்கவே அவன் படைக்கப்பட்டுள்ளான் . அந்த மரண ( த்திற்கான காரண ) ங்கள் அவனைவிட்டுத் தவறிவிட்டாலும் அவன் தள்ளாமையில் விழவே செய்கிறான் . இறுதியில் இறந்து போகிறான் .

Reference: ( திர்மிதீ : 2076 / 2150). இது ‘ ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .