16-باب :لا يرد القدر إلا الدعاء
பாடம்
16
பாடம்: 16. துஆவைத் தவிர விதியை வேறு எதுவும் மாற்றாது
ஹதீஸ் 285
அத்தியாயம் 7
பாடம் 16
عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ . 285
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சல்மான் அல்ஃபாரிஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தலைவிதியைப் பிரார்த்தனை தவிர வேறு எதுவும் மாற்றிவிடாது . நல்லறம் தவிர வேறு எதுவும் ஆ யுளை அதிகமாக்கிவிடாது .
Reference: ( திர்மிதீ : 2065 / 2139). இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்தில் உள்ளது .
ஹதீஸ் 286
அத்தியாயம் 7
பாடம் 16
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : لَا يَنْفَعُ الْحَذَرُ مِنَ الْقَدْرِ ، وَلَكِنَّ اللَّهَ يَمْحُو بِالدُّعَاءِ مَا يَشَاءُ مِنَ الْقَدَرِ . 286
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : விதியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது எந்தப் பயனுமளிக்காது . எனினும் அல்லாஹ் ( நாம் செய்யும் ) பிரார்த்தனை மூலம் அவன் நாடிய விதியை அழிப்பான் .
Reference: ( முஸ்தத்ரக் ஹாகிம் : 3333). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .