10-باب :تصريف الله تعالى القلوب
பாடம் 10

பாடம்: 10. அல்லாஹ் உள்ளங்களை மாற்றுதல்

ஹதீஸ் 276 அத்தியாயம் 7 பாடம் 10

(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ . 276

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆதமின் மக்களின் ( மனிதர்களின் ) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன . அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான் `` என்று கூறிவிட்டு , “ இறைவா ! உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2654, 5161)
ஹதீஸ் 277 அத்தியாயம் 7 பாடம் 10

عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا قَالَ نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ . 277

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாகக் கூறுபவர்களாக இருந்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் உங்களையும் நீங்கள் கொண்டுவந்ததையும் ( உண்மையென ) நம்பிக்கை கொண்டிருக்கிறோம் . ( இந்நிலையிலும் ) நீங்கள் எங்களின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றீர்களா ?” என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஆம் ! திண்ணமாக ( மனித ) உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன . அவன் ( நாடியவாறு ) அவற்றைப் புரட்டுகின்றான் ” என்று விடையளித்தார்கள் .

Reference: ( திர்மிதீ : 2140, இப்னுமாஜா : 3834). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .