14-باب :أهل الغرف
பாடம் 14

பாடம்: 14. (சொர்க்க) அறைகளில் வசிப்போர்

ஹதீஸ் 232 அத்தியாயம் 6 பாடம் 14

(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الْأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلٍ مَا بَيْنَهُمْ". قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ: "بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ . 232

அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : " சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை , அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று ( ஆர்வத்துடன் ) பார்ப்பார்கள் . ( அந்தஸ்தில் ) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு ( ஏக்கம் கொண்டுதான் ) அப்படிப் பார்ப்பார்கள் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) நபித்தோழர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அவை நபிமார்கள் தங்குமிடங்கள்தாமே ? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா ?`` என்று கேட்டனர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை . என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக ! அ( ங்கே தங்குப ) வர்கள் அல்லாஹ்வின் மீது ( உறுதியான ) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 3256, முஸ்லிம் : 2831)
ஹதீஸ் 233 அத்தியாயம் 6 பாடம் 14

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ غُرْفَةً يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِمَنْ أَلَانَ الْكَلَامَ وَأَطْعَمَ الطَّعَامَ وَبَاتَ لِلَّهِ قَائِمًا وَالنَّاسُ نِيَامٌ . 233

அப்துல்லா ‎ ஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ திண்ணமாகச் சொர்க்கத்தில் ஓர் அறை உண்டு . அதன் வெளிப்புறம் உட்புறத்திலிருந்து காணப்படும் . அதன் உட்புறம் வெளிப்புறத்திலிருந்து காணப்படும் ” என்று அல்லாஹ்வின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு , “ அது யாருக்கு அல்லாஹ்வின் தூதரே !” என்று கேட்டார்கள் . “ யார் மென்மையாகப் பேசி , ( பசித்தவருக்கு உணவு கொடுத்து , மக்கள் தூங்கும் வேளையில் அல்லாஹ்வுக்காக நின்று வழிபட்டாரோ அவருக்குரியது ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 6615, ஹாகிம் : 270) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப அமைந்த ஹதீஸ் ஆகும் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .