11-باب : يدخل الجنة سبعون أَلفاً على صورة القمر
பாடம் 11

பாடம்: 11. சந்திரன் தோற்றத்தில் (முகம் ஒளிரும் நிலையில்) எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்

ஹதீஸ் 229 அத்தியாயம் 6 பாடம் 11

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ . 229

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் , பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி ( விசாரணையின்றிச் சொர்க்கத்துக்குள் ) நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ ரளியல்லாஹு அன்ஹு தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வே ! இவரையும் அவர்களுள் ஒருவராக ஆக்குவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . பிறகு அன்ஸாரிகளுள் ஒருவர் எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 6542, முஸ்லிம் : 216)