8-باب : أَبواب الجنة
பாடம் 8

பாடம்: 8. சொர்க்கத்தின் கதவுகள்

ஹதீஸ் 226 அத்தியாயம் 6 பாடம் 8

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ . 226

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிலிருந்து , “ அல்லாஹ்வின் அடியாரே ! இது ( பெரும் ) நன்மையாகும் ! ( இதன் வழியாக நுழையுங்கள் !)” என்று அழைக்கப்படுவார் . ( தமது உலக வாழ்வின் போது ) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; அறப்போர் புரிந்தவர்கள் " ஜிஹாத் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் " ரய்யான் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; தர்மம் செய்தவர்கள் " ஸதகா ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் !`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே ! எனவே , எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ! நீரும் அவர்களுள் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் !`` என்றார்கள் .

Reference: ( புகாரீ : 1897, முஸ்லிம் : 1027)