8- باب : لكل إنسان منزلان
பாடம் 8

பாடம்: 8. ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு விடுகள்

ஹதீஸ் 209 அத்தியாயம் 4 பாடம் 8

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ مَنْزِلٌ فِي الْجَنَّةِ وَمَنْزِلٌ فِي النَّارِ فَإِذَا مَاتَ فَدَخَلَ النَّارَ وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى أُولَئِكَ هُمْ الْوَارِثُونَ . 209

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வீடுகள் இல்லாமலில்லை . சொர்க்கத்தில் ஒரு வீடு ; நரகத்தில் ஒரு வீடு . ஒருவன் இறந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் , அவனுடைய வீட்டைச் சொர்க்கவாசி வாரிசாகப் பெற்றுக்கொள்வார் . அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் : “ அவர்கள்தாம் வாரிசுதாரர்கள் .” (23: 10)

Reference: ( இப்னுமாஜா : 4332 / 4341) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .