பாடம்: 17. (எந்த நபியும் வராத காலத்தில் வாழ்ந்த) இடைவெளிக் காலத்தினர்
عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعَةٌ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَصَمُّ لَا يَسْمَعُ شَيْئًا وَرَجُلٌ أَحْمَقُ وَرَجُلٌ هَرَمٌ وَرَجُلٌ مَاتَ فِي فَتْرَةٍ فَأَمَّا الْأَصَمُّ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَسْمَعُ شَيْئًا وَأَمَّا الْأَحْمَقُ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَالصِّبْيَانُ يَحْذِفُونِي بِالْبَعْرِ وَأَمَّا الْهَرَمُ فَيَقُولُ رَبِّي لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَعْقِلُ شَيْئًا وَأَمَّا الَّذِي مَاتَ فِي الْفَتْرَةِ فَيَقُولُ رَبِّ مَا أَتَانِي لَكَ رَسُولٌ فَيَأْخُذُ مَوَاثِيقَهُمْ لَيُطِيعُنَّهُ فَيُرْسِلُ إِلَيْهِمْ أَنْ ادْخُلُوا النَّارَ قَالَ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ دَخَلُوهَا لَكَانَتْ عَلَيْهِمْ بَرْدًا وَسَلَامًا . 196
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்வத் பின் சரீஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு பேர் மறுமை நாளில் விசாரிக்கப்படுவர் . 1. செவிடன்-எதையும் செவியுறாதவன் . 2. ( நல்லது எது , கெட்டது எது என அறிய முடியாத ) முட்டாள் , 3. ( எதற்கும் இயலாத ) தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் , 4. ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் . செவிடர் சொல்வார் : என் இறைவா ! நான் எதையும் செவியுற முடியாத நிலையில் இருந்தபோது இஸ்லாமிய மார்க்கம் வந்தது . முட்டாள் சொல்வார் : என் இறைவா ! என்னைச் சிறுவர்கள் ( கேலி செய்து ) விட்டையால் அடித்துக் கொண்டிருந்த நிலையில் இஸ்லாம் வந்தது . தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் கூறுவார் : “ என் இறைவா ! நான் எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இஸ்லாம் வந்தது .” ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் சொல்வார் : “ என் இறைவா ! உன்னிடமிருந்து எந்தத் தூதரும் வரவில்லை .” ( அதன்பின் ) அவர்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வான் . அவர்கள் அவனுக்குப் பணிகின்றார்களா என்று சோதிப்பதற்காக , அவர்களிடம் “ நரகத்தில் நுழையுங்கள் ” என்று தூது அனுப்புவான் . முஹம்மதின் ஆன்மா எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதில் அவர்கள் நுழைந்தால் அது அவர்களுக்கு இதம் தரும் குளிர்ச்சியாக இருக்கும் .