9- باب : إِخراج بعث النار
பாடம் 9

பாடம்: 9. நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்தல்

ஹதீஸ் 173 அத்தியாயம் 3 பாடம் 9

( ق) عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ قَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعَرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ الرَّقْمَةِ فِي ذِرَاعِ الْحِمَارِ . 173

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) அல்லாஹ் ( ஆதி மனிதரை நோக்கி ) " ஆதமே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கட்டளையிடு .) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் `` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் "( உங்கள் சந்ததிகளில் ) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை ( மற்றவர்களிலிருந்து ) தனியாகப் பிரித்திடுங்கள் `` என்று கூறுவான் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் “ எத்தனை நரகவாசிகளை ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவன் “ ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை ( த் தனியாகப் பிரித்திடுங்கள் )`` என்று பதிலளிப்பான் . ( அப்போதுள்ள பயங்கரமான சூழ்நிலையின் காரணத்தால் ) பாலகன்கூட நரைத்து ( மூப்படைந்து ) விடுகின்ற , கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை ( ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக ) ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான் . மக்களை ( அச்சத்தால் ) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள் . ஆனால் , அவர்கள் ( உண்மையிலேயே மதுவால் ) போதையுற்றிருக்கமாட்டார்கள் . மாறாக , அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும் . இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது . எனவே , அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே ! ( ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும் ) அந்த ஒரு நபர் எங்களுள் யார் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( பயப்படாதீர்கள் ;) நற்செய்தி பெறுங்கள் . யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால் , உங்களுள் ஒருவர் ( நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில் ) இருப்பார் `` என்று கூறிவிட்டுப் பிறகு , “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கின்றேன் `` எனக் கூறினார்கள் . உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் ( அல்லாஹு அக்பர் ) முழக்கமிட்டோம் . பிறகு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக இருக்க வேண்டுமென நான் பேராவல் கொள்கின்றேன் . மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று , அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 6530, முஸ்லிம் : 222)