பாடம்: 7. மறுமைநாளின் அமளிதுமளிகள்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ . 168
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( அது ) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் `` எனும் (83:6ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு , “ அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களுள் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார் `` என்று கூறினார்கள்
(م)عَنْ سُلَيْمُ بْنُ عَامِرٍ حَدَّثَنِي الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الْخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ 169
மிக்தாத் பின் அல்அஸ்வத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும் . எந்த அளவுக்கென்றால் , அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலை தூரமே இருக்கும் . அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள் . சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை இடுப்பு வரையிலும் , சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் கேட்டேன் . இதைக் கூறியபோது , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையால் வாயை நோக்கிச் சைகை செய்தார்கள் . இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! " மைல் ` என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா ? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக் கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை `` என்று கூறினார்கள் .