பாடம்: 2. ஸூர் குறித்துக் கூறுதலும் இரண்டு ஊதலுக்கு இடையே உள்ளதும்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ قَالَ ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنْ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنْ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ . 156
அபூசாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “( உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும் , பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும் ) இரு எக்காளத்திற்கும் ( ஸூர் ) இடையே ( இடைப்பட்டக் காலம் ) நாற்பது `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நண்பர்கள் , “( அபூஹுரைரா அவர்களே !) நாட்களில் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “( நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து ) நான் விலகிக் கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . ( நண்பர்களான ) அவர்கள் , “ நாற்பது மாதங்களா ?`` என்று கேட்டனர் . அதற்கும் “ நான் விலகிக்கொள்கிறேன் `` என அபூஹுரைரா கூறினார்கள் . “ வருடங்கள் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அப்போதும் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ நான் விலகிக்கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . பின்னர் , “ வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான் . அப்போது ( மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனிதச் சடலங்கள் ) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள் . மனிதனிலுள்ள ( உறுப்புகள் ) அனைத்துமே ( மண்ணுக்குள் ) உக்கிப்போகாமல் இருப்பதில்லை . ஆனால் , ஒரேயோர் எலும்பைத் தவிர ! அதுதான் ( முதுகந்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும் ) உள்வால் எலும்பின் ( அணுவளவு ) நுனியாகும் . அதை வைத்தே படைப்பினங்கள் ( மீண்டும் ) மறுமை நாளில் உருவாக்கப்படும் `` என்று மேலும் சொன்னார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصُّورُ قَرْنٌ يُنْفَخُ فِيهِ . 157
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் என்பது ஊதப்படும் ஊதுகொம்பு ஆகும் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الْقَرْنِ قَدْ الْتَقَمَ الْقَرْنَ وَاسْتَمَعَ الْإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا . 158
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும் ? எக்காளம் ஊதுகின்ற ( வான ) வர் எக்காளத்தின் முனைப்பகுதியைத் தமது வாயில் வைத்துக்கொண்டு ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று காது தாழ்த்திக் காத்திருக்கிறாரே ” என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " إِنَّ طَرْفَ صَاحِبِ الصُّورِ مُذْ وُكِّلَ بِهِ مُسْتَعِدٌّ يَنْظُرُ نَحْوَ الْعَرْشِ مَخَافَةَ أَنْ يُؤْمَرَ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْهِ طَرْفُهُ ، كَأَنَّ عَيْنَيْهِ كَوْكَبَانِ دُرِّيَّانِ . 159
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் ஊதுபவருடைய கண்பார்வை அவர் அதற்காக நியமிக்கப்பட்டதிலிருந்து தயாராக இருக்கிறது . அவர் தம் கண்பார்வையைச் சிமிட்டுவதற்குள் ஏவப்பட்டுவிடுவாரோ என்று அஞ்சியவராக அவர் அர்ஷையே பார்த்தவாறு இருக்கிறார் . அவருடைய இரண்டு கண்களும் மின்னக்கூடிய இரண்டு நட்சத்திரங்களைப் போன்று உள்ளன .