பாடம்: 24. (தாப்பத்துல் அர்ள் எனும்) அதிசயப் பிராணி
عَنْ أَبِي الطُّفَيْلِ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ حُذَيْفَةَ فَذُكِرَتِ الدَّابَّةُ ، فَقَالَ حُذَيْفَةُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : " إِنَّهَا تَخْرُجُ ثَلَاثَ خَرْجَاتٍ فِي بَعْضِ الْبَوَادِي ، ثُمَّ تَكْمُنُ ، ثُمَّ تَخْرُجُ فِي بَعْضِ الْقُرَى حَتَّى يُذْعَرُوا وَحَتَّى تُهَرِيقَ فِيهَا الْأُمَرَاءُ الدِّمَاءَ ، ثُمَّ تَكْمُنُ ، قَالَ : فَبَيْنَمَا النَّاسُ عِنْدَ أَعْظَمِ الْمَسَاجِدِ وَأَفْضَلِهَا وَأَشْرَفِهَا - حَتَّى قُلْنَا الْمَسْجِدَ الْحَرَامَ وَمَا سَمَّاهُ - إِذِ ارْتَفَعَتِ الْأَرْضُ وَيَهْرُبُ النَّاسُ ، وَيَبْقَى عَامَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَقُولُونَ : إِنَّهُ لَنْ يُنْجِيَنَا مِنْ أَمْرِ اللَّهِ شَيْءٌ ، فَتَخْرُجُ فَتَجْلُو وُجُوهَهُمْ حَتَّى تَجْعَلَهَا كَالْكَوَاكِبِ الدُّرِّيَّةِ ، وَتَتْبَعُ النَّاسَ ، جِيرَانٌ فِي الرِّبَاعِ شُرَكَاءُ فِي الْأَمْوَالِ وَأَصْحَابٌ فِي الْإِسْلَامِ . 143
அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தோம் . அப்போது நான் தாப்பத்து ( ல் அர்ள் எனும் அதிசயப் பிராணி ) குறித்து நினைவு கூர்ந்தேன் . அப்போது ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : சில நகர்ப்புறங்களில் இருந்து அது மூன்று தடவைகள் வெளியேறிவரும் . பிறகு மறைந்துவிடும் . பிறகு சில கிராமங்களில் இருந்து அது வெளியேறிவந்து அங்குள்ள செல்வர்களைக் கொன்றுபோடும் . பிறகு மறைந்துவிடும் . மேலும் கூறினார்கள் : மிக மகத்தான , மிகச் சிறந்த , சிறப்புவாய்ந்த மஸ்ஜிதில் மக்கள் இருக்கும்போது - என்று கூறி , அதன் பெயரைக் கூறவில்லை . அது மஸ்ஜிதுல் ஹராம் என்று நாங்கள் கூறிக்கொண்டோம் - நிலப்பகுதி உயர்ந்துவிடும் . மக்கள் வெருண்டோடுவார்கள் . ( ஆனால் ஈமானில் உறுதியான ) முஸ்லிம்கள் ( அதே இடத்திலேயே ) அப்படியே இருந்துகொண்டு , “ அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எந்த ஒன்றும் நம்மைக் காப்பாற்ற முடியாது ” என்று கூறுவார்கள் . அது வெளியேறிவந்து , அவர்களுடைய முகங்களை துர்ரிய்யா எனும் நட்சத்திரங்கள் ஒளிர்வதைப் போன்று ஒளிமயமாக்கிவிடும் . வீடுகளில் வசிக்கின்ற அண்டைவீட்டுக்காரர்கள் - அவர்கள் செல்வங்களில் கூட்டாளிகளாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் தோழர்களாகவும் இருந்தவர்கள் - ( வெருண்டோடுகின்ற ) அந்த மக்களைப் பின்பற்றிச் செல்வார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلَام فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَتَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتِمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ . 144
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அதிசயப் பிராணி தோன்றும் . அதனுடன் சுலைமான் பின் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மோதிரமும் மூஸா பின் இம்ரான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடியும் வெளிப்படும் . அக்கைத்தடியால் அது இறைநம்பிக்கையாளரின் முகத்தை ஒளிரச் செய்யும் . அம்மோதிரத்தால் அது இறைமறுப்பாளரின் மூக்கைத் துண்டிக்கும் . அதற்குள் அங்கு வசிப்பவர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள் . அப்போது ஒருவர் , இறைநம்பிக்கையாளரே என்று அழைப்பார் . மற்றொருவர் , இறைமறுப்பாளனே என்று அழைப்பார் .