பாடம்: 13. செல்வம் பெருகிக் கொழித்தலும் அரபு நிலம் பசுமையாதலும்
(ق) لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِيْ . 124
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் ஏற்படாது . எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தாம் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வார் . மேலும் யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا وَحَتَّى يَسِيرَ الرَّاكِبُ بَيْنَ الْعِرَاقِ وَمَكَّةَ لَا يَخَافُ إِلَّا ضَلَالَ الطَّرِيقِ وَحَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: الْقَتْلُ 125
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரபு மண் மேய்ச்சல் நிலங்களாகவும் ( கரை புரண்டோடும் ) வாய்க்கால்களாகவும் மாறாத வரை ( யுகமுடிவு நாள் நிகழாது ). இராக்கிற்கும் மக்காவிற்கும் இடையே பயணிக்கக்கூடிய ஒரு பயணி வழிப்பறிக் கொள்ளையைத் தவிர எதையும் கண்டு அஞ்சமாட்டார் . ஹர்ஜ் அதிகமாகி விடுகிற வரை ( உலக முடிவு நாள் நிகழாது ). “ அல்லாஹ்வின் தூதரே ! ஹர்ஜ் என்றால் என்ன ?” என்று கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ கொலை ” என்று பதிலளித்தார்கள் .