பாடம்: 9. உரோமர்கள் மிகுதியாக இருக்கும் நிலையில் மறுமை நாள் நிகழும்
(م) عَن الْمُسْتَوْرِدُ الْقُرَشِيُّ عِنْدَ عَمْرِو بْنِ الْعَاصِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ فَقَالَ لَهُ عَمْرٌو أَبْصِرْ مَا تَقُولُ قَالَ أَقُولُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّ فِيهِمْ لَخِصَالًا أَرْبَعًا إِنَّهُمْ لَأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ. 118
உலைய்யு பின் ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்தவ்ரித் பின் ஜத்தாத் அல்குறஷீ ரளியல்லாஹு அன்ஹு , அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும் ` என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் `` என்றார்கள் . அப்போது அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் சொல்வதை யோசித்துக்கொள்ளும் `` என்று கூறினார்கள் . அதற்கு முஸ்தவ்ரித் ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கிறேன் `` என்றார்கள் . அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே ( உரோமர்களிடையே ) நான்கு குணங்கள் இருக்கும் ( என்பதையும் அறிந்துகொள்க ” என்றார்கள் . ( அவையாவன :) 1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர் . 2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக விழித்துக்கொள்பவர்கள் . 3. ( களத்திலிருந்து ) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள் . 4. ஏழைகள் , அநாதைகள் , நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள் . ஐந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு . ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து ( மக்களைக் ) காப்பவர்கள் .