பாடம்: 1. மறுமை நாளின் அடையாளங்களைப் பொதுப்படையாகக் கூறுதல்
(ق) عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الْخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ". 94
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : கல்வி அகற்றப்பட்டுவிடுவதும் , அறியாமை மலிந்துவிடுவதும் , விபச்சாரம் அதிகரித்து விடுவதும் , மது அருந்துதல் அதிகரித்து விடுவதும் , ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து , ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களுள் அடங்கும் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ ". 95
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கல்வி கைப்பற்றப்படாத வரை , நில நடுக்கங்கள் நிறைந்துவிடாத வரை , காலம் சுருங்கிடாத வரை , குழப்பங்கள் வெளிப்படாத வரை , ஹர்ஜ் ( கொந்தளிப்பு ) மிகுதியாகாத வரை , - ஹர்ஜ் என்பது கொலையாகும் , கொலையாகும் . உங்கள் மத்தியில் செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது .
(خ) عن عَوْفَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ، وَهْوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ " اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَىِ السَّاعَةِ، مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لاَ يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلاَّ دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا ". 96
அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்றேன் . அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள் . அப்போது அவர்கள் , “ இறுதி நாள் வருவதற்கு முன்பு ( அதற்குரிய ) ஆறு அடையாளங்கள் நிகழும் . அவற்றை எண்ணிக்கொள் : 1. எனது மரணம் . 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல் . 3. ஆடுகளுக்கு வருகின்ற ( ஒரு வகை ) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் . ( அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள் ) 4. பிறகு செல்வம் பெருகி வழியும் . எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் ( அதனை அற்பமாகக் கருதி ) அவர் அதிருப்தியுடனிருப்பார் . 5. பிறகு தீமையன்று தோன்றும் . அரபியர்களின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது . 6. பிறகு ( உரோமர்களுக்கும் ) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் ( அதை மதிக்காமல் ) அவர்கள் ( உங்களை ) மோசடி செய்து விடுவார்கள் . பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே ( அணி வகுத்து ) அவர்கள் வருவார்கள் . ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَادِرُوا بِالأَعْمَالِ سِتًّا الدَّجَّالَ وَالدُّخَانَ وَدَابَّةَ الأَرْضِ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَأَمْرَ الْعَامَّةِ وَخُوَيِّصَةَ أَحَدِكُمْ " . 97
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆறு அடையாளங்கள் நடைபெறுவதவற்குமுன் விரைந்து நற்செயல் புரியுங்கள் . சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் , அல்லது புகை , அல்லது தஜ்ஜால் , அல்லது ( அதிசயப் ) பிராணி , அல்லது ஒட்டுமொத்தமாக ஏற்படும் ( யுக ) முடிவு , அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் மரணம் ,
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا لَمْ أَنْسَهُ بَعْدُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَوَّلَ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا فَالأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا " . 98
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களுள் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் .
(م) عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ " مَا تَذَاكَرُونَ " . قَالُوا نَذْكُرُ السَّاعَةَ . قَالَ " إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ " . فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صلى الله عليه وسلم وَيَأْجُوجَ وَمَأْجُوجَ وَثَلاَثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ . 99
அபூஸரீஹா ஹுதைஃபா பின் அஸீத் அல்ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறைக்குக் கீழே ) பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களை எட்டிப்பார்த்து , “ எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யுக முடிவு நாளைப் பற்றி ( ப் பேசிக்கொண்டிருக்கிறோம் )`` என்று கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீங்கள் ( பெரிய ) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது `` என்று கூறிவிட்டு , அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள் : 1. புகை , 2. தஜ்ஷால் , 3. ( பேசும் ) பிராணி , 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது , 5. மர்யமின் புதல்வர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குதல் , 6. யஃஜூஜ் , மஃஜூஜ் , 7-9. மூன்று நில நடுக்கங்கள் . ஒன்று கிழக்கிலும் , மற்றொன்று மேற்கிலும் , இன்னொன்று அரபுத் தீபகற்பத்திலும் , 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும் .
عَنْ عِلْبَاءَ السُّلَمِيِّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : " لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى حُثَالَةِ النَّاسِ 100
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இல்பா அஸ்ஸுலமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கெட்ட மக்கள் மீதுதான் ( அவர்கள் மட்டும் இருக்கும் போதுதான் ) மறுமை நாள் வரும் .
عَنْ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: سَمِعْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَخُرُوجُ الدَّابَّةِ ضُحًى، فَأَيَّتُهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا، فَالْأُخْرَى عَلَى أَثَرِهَا ". 101
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களில் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் . பிறகு அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : - அவர் வேதங்களைப் படித்திருந்தார் - சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதை அவற்றுள் முதலாவது அடையாளமாக எண்ணுகிறேன் . ஏனென்றால் அது ஒவ்வொரு நாளும் அர்ஷுக்குக் கீழ் மறையும் போதெல்லாம் ( அல்லாஹ்வுக்குத் ) தலை வணங்குகிறது . மீண்டும் செல்ல அனுமதி கோருகிறது . எனவே அது மீண்டும் செல்ல அனுமதி கொடுக்கப்படுகிறது . இறுதியில் சூரியன் மேற்கிலிருந்து உதயமாக வேண்டுமென அல்லாஹ்வுக்குத் தோன்றும்போது அது ஏற்கெனவே செய்து கொண்டிருந்ததைப் போல ( அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு ) மேற்கிலிருந்து உதயமாகும் . அது அர்ஷுக்குக் கீழ் வரும் ; ( அவனுக்குத் ) தலை வணங்கி , திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . அல்லாஹ் நாடிய அளவு இரவு நேரம் கழிந்துவிடும் . அதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் கிழக்கை அடைய முடியாது என்று அது அறிந்துகொள்ளும் . பிறகு அது , “ என் இறைவா ! கிழக்கு எவ்வளவோ தூரம் இருக்கிறதே ! எனக்காக மக்களுக்கு யார் ( பொறுப்பேற்பார் )” என்று சொல்லும் . மேல்வானம் மாலையைப் போல மாறிவிடும் . திரும்பிச் செல்ல அனுமதி கோரும் . அப்போது அதனிடம் , “ நீ உன் இடத்திலிருந்தே உதித்துக்கொள் ” என்று சொல்லப்படும் . எனவே அது ( அதே இடத்திலிருந்து ) மேற்கிலிருந்தே மக்களுக்கு உதிக்கும் . பிறகு அப்துல்லாஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள் : உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி ( யாகிய இறுதி நாள் ) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது . (7: 158)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا لَا تُكِنُّ مِنْهُ بُيُوتُ الْمَدَرِ ، وَلَا تُكِنُّ مِنْهُ إِلَّا بُيُوتُ الشَّعَرِ . 102
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களுக்கு மிகப்பெரும் அளவில் ஒரு மழை பொழிகின்ற வரை மறுமை நாள் நிகழாது . களி மண்ணால் ஆன எந்த வீடும் அதிலிருந்து மறைக்கப்படாது . உரோமங்களால் ஆன வீடுகளைத் தவிர வேறு எந்த வீடும் அதிலிருந்து மறையாது .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْآيَاتُ خَرَزَاتٌ مَنْظُومَاتٌ فِي سِلْكٍ، فَإِنْ يُقْطَعِ السِّلْكُ يَتْبَعْ بَعْضُهَا بَعْضًا . 103
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளின் ) அடையாளங்கள் ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பாசிகளைப் போன்றவையாகும் . அந்த நூல் அறுக்கப்பட்டால் அதில் ஒன்று மற்றொன்றைப் பின்பற்றும் . ( ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக வரும் ).
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَسَافَدُوا فِي الطَّرِيقِ تَسَافُدَ الْحَمِيرِ ، قُلْتُ : إِنَّ ذَاكَ لَكَائِنٌ ؟ قَالَ : نَعَمْ لَيَكُونَنَّ. 104
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ கழுதைகள் உடலுறவு கொள்வதைப்போல் வழியில் ( மக்கள் ) உடலுறவு கொள்கின்ற வரை மறுமை நாள் நிகழாது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது நான் , “ நிச்சயமாக அது நிகழுமா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நிச்சயமாக அது நிகழும் ” என்று கூறினார்கள் .
عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ الْبُرْجُمِيِّ ، قَالَ : دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ يَوْمًا الْمَسْجِدَ ، فَإِذَا الْقَوْمُ رُكُوعٌ ، فَرَكَعَ ، فَمَرَّ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ ، فَقَالَ عَبْدُ اللهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ثُمَّ وَصَلَ إِلى الصَّفِ،فَلَمَّا فَرِغَ سَأَلْتُهُ عَنْ قَوْلِهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ؟ فَقَالَ : " إِنَّهُ كَانَ يَقُولُ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا ، وَحَتَّى يُسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ بِالْمَعْرِفَةِ ، وَحَتَّى تَتْجَرَ الْمَرْأَةُ وَزَوْجُهَا ، وَحَتَّى تَغْلُو الْخَيْلُ وَالنِّسَاءُ ، ثُمَّ تَرْخُصَ فَلَا تَغْلُو إِلَى يَوْمِ الْقِيَامَةِ. عبد الله هو ابن مسعود. 105
காரிஜா பின் அஸ்ஸல்த் அல்புர்ஜுமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அப்துல்லாஹ் ( பின் மஸ்ஊத் ) அவர்களுடன் மஸ்ஜிதில் நுழைந்தேன் . அப்போது மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள் . எனவே அவரும் தொழுகச் சென்றார் . அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார் . அப்போது அப்துல்லாஹ் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று கூறினார் . பிறகு ( தொழுகை ) அணியை அடைந் ( து தொழுது முடித் ) தார் . அவர் தொழுது முடித்தபோது , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன் . அப்போது அவர் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகத் தெரிவித்ததாவது : மஸ்ஜிதுகள் பாதைகளாக ஆக்கப்படும் வரை , ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு ( மட்டும் ) முகமன் சொல்லும் வரை , கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை , குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து , பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது . ( பின்னர் ) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது .