24-باب: تعلم القرآن والعمل به
பாடம் 24

பாடம்: 24. குர்ஆனைக் கற்றுக்கொண்டு அதன்படி செயல்படுதல்

ஹதீஸ் 520 அத்தியாயம் 10 பாடம் 24

عَنْ عَطَاءٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا مَنْ كَانَ يُقْرِئُنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُمْ كَانُوا يَقْتَرِئُونَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ فَلَا يَأْخُذُونَ فِي الْعَشْرِ الْأُخْرَى حَتَّى يَعْلَمُوا مَا فِي هَذِهِ مِنْ الْعِلْمِ وَالْعَمَلِ قَالُوا: فَعَلِمْنَا الْعِلْمَ وَالْعَمَلَ . 520

அபூஅப்திர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களிடமிருந்து ஓதிக்காட்டியவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் . அத்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பத்து வசனங்களை ஓதக் கேட்பார்கள் . ( பின்னர் ) அந்தப் பத்து வசனங்களிலும் உள்ள கல்வியை அறிந்து அவற்றைச் செயல்படுத்துகிற வரை வேறு பத்து வசனங்களைச் செவியுற மாட்டார்கள் . எனவே அவர்கள் ( இவற்றிலிருந்து ) கல்வியையும் செயல்பாட்டையும் நாங்கள் அறிந்து கொண்டோம் என்று கூறிவந்தார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 23482) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 521 அத்தியாயம் 10 பாடம் 24

عَنْ شَرِيكٌ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : " كُنَّا إِذَا تَعَلَّمْنَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ مِنَ الْقُرْآنِ ، لَمْ نَتَعَلَّمْ مِنَ الْعَشْرِ الَّذِي نَزَلَتْ بَعْدَهَا حَتَّى نَعْلَمَ مَا فِيهِ " . قِيلَ لِشَرِيكٍ مِنَ الْعَمَلِ ؟ قَالَ : نَعَمْ . 521

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனிலிருந்து பத்து வசனங்களைக் கற்றுக்கொண்டால் , அவற்றில் உள்ளதை நாங்கள் அறிந்து கொள்கின்ற வரை அதன் பிறகு இறங்கிய பத்து வசனங்களைக் கற்றுக்கொள்ள மாட்டோம் . அப்போது ஷரீக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “( எதைக் கற்றுக்கொள்கிற வரை ? அவற்றின்படி ) செயல்படுவதையா ?” என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர்கள் , “ ஆம் ” என்று விடையளித்தார்கள் .

Reference: ( ஹாகிம் : 2047, பைஹகீ : 3/119) இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 522 அத்தியாயம் 10 பாடம் 24

عَنْ ابْنِ عُمَرَ قَالَ : لَقَدْ عِشْتُ بُرْهَةً مِنْ دَهْرٍ وَإِنَّ أَحَدَنَا يُؤْتَى الْإِيمَانَ قَبْلَ الْقُرْآنِ ، وَتَنْزِلُ السُّورَةُ عَلَى مُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَتَعَلَّمُ حَلَالَهَا وَحَرَامَهَا وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهَا كَمَا تَعَلَّمُونَ أَنْتُمُ الْقُرْآنَ ، ثُمَّ لَقَدْ رَأَيْتُ رِجَالًا يُؤْتَى أَحَدُهُمُ الْقُرْآنَ قَبْلَ الْإِيمَانِ ، فَيَقْرَأُ مَا بَيْنَ فَاتِحَةِ الْكِتَابِ إِلَى خَاتِمَتِهِ مَا يَدْرِي مَا آمِرُهُ وَلَا زَاجِرُهُ ، وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهُ ، وَيَنْثُرَهُ نَثْرَ الدَّقَلِ . 522

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் எங்கள் காலத்தில் சற்று நிம்மதியாக வாழ்ந்திருக்கிறோம் . எங்களுள் ஒருவர் குர்ஆனுக்கு முன்பே இறைநம்பிக்கை ( ஈமான் ) வழங்கப்பட்டார் . முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஓர் அத்தியாயம் இறங்கும் . ( அதன்பின் ) அவர் அது ஆகுமாக்குவதையும் தடைசெய்வதையும் அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அவற்றையெல்லாம் - இன்று நீங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வதைப் போன்று - கற்றுக்கொள்வார் . பிறகு இன்றைய ஆண்களைப் பார்க்கிறேன் . அவர்களுள் ஒருவர் இறைநம்பிக்கைக்கு முன்னரே குர்ஆன் கொடுக்கப்பட்டுள்ளார் . எனவே அவர் அதனை ஃபாத்திஹா அத்தியாயத்திலிருந்து அதன் கடைசி ( அத்தியாயம் ) வரை ஓதுகிறார் . ( ஆனால் ) அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் ( என்னவென்று ) அறியமாட்டார் . அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அதையும் அறியமாட்டார் . ( மாறாக பேரீச்ச மரம் ) காய்ந்த மட்டமான பேரீச்சம் பழங்களை உதிர்ப்பதைப் போன்று உதிர்ப்பார் .

Reference: ( ஹாகிம் : 101, பைஹகீ : 3/120) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹதீஸ் அமைந்துள்ளது . என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .