19-باب : قوم يتعجلون أجر القرآن
பாடம் 19

பாடம்: 19. குர்ஆனின் கூலியை உலகத்திலேயே தேடுபவர்கள்

ஹதீஸ் 505 அத்தியாயம் 10 பாடம் 19

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ فَقَالَ اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ . 505

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களிடம் வந்தார்கள் . எங்களில் அரபியர்களும் அரபியர்கள் அல்லாதோரும் இருந்தனர் . நீங்கள் ஓதுங்கள் , அனைத்தும் அழகாகத்தான் இருக்கின்றது . அம்பைச் சீர்செய்வதைப் போன்று குர்ஆனைச் சீராக ஓதக்கூடிய கூட்டங்கள் பின்னால் தோன்றும் . அவர்கள் இதன்மூலம் ( உலகத்திலேயே கூலியை ) விரைவாக எதிர்பார்ப்பார்கள் . ( அதன் கூலியை மறுமையில் பெறுவதற்காகக் ) காத்திருக்க மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( அபூதாவூத் : 706 / 830) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 506 அத்தியாயம் 10 பாடம் 19

عَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغْلُوا فِيهِ وَلَا تَجْفُوا عَنْهُ وَلَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَكْثِرُوا بِهِ . 506

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் ; அதில் வரம்பு மீறாதீர்கள் ; அதைப் புறக்கணிக்காதீர்கள் ; அதை வைத்துக்கொண்டு ( ஆதாயம் தேடிச் ) சாப்பிடாதீர்கள் ; அதைக் கொண்டு ( பொருளாதாரத்தை ) அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 15529) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .