15-باب : فضل استماع القرآن
பாடம் 15

பாடம்: 15. குர்ஆனைச் செவியுறுதலின் சிறப்பு

ஹதீஸ் 495 அத்தியாயம் 10 பாடம் 15

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ اسْتَمَعَ إِلَى آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا . 495

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யார் ஒரு வசனத்தைச் செவியுற்றாரோ அது அவருக்கு ஒளியாக ஆகிவிடும் .

Reference: ( தாரிமீ : 3410) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ளஈஃப் ’ தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 496 அத்தியாயம் 10 பாடம் 15

عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ إِنَّ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ لَهُ أَجْرٌ وَإِنَّ الَّذِي يَسْتَمِعُ لَهُ أَجْرَانِ . 496

காலித் பின் மஅதான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : குர்ஆனை ஓதுபவருக்கு ஒரு கூலி உண்டு . அதைச் செவியுறுபவருக்கு இரண்டு கூலி உண்டு .

Reference: ( தாரிமீ : 3409)