14-باب : القرآن كلام الله
பாடம்
14
பாடம்: 14. குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் (பேச்சு)
ஹதீஸ் 493
அத்தியாயம் 10
பாடம் 14
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ : أَدْرَكْتُ النَّاسَ مُنْذُ سَبْعِينَ سَنَةٍ ، يَقُولُونَ : اللَّهُ الْخَالِقُ ، وَمَا سِوَاهُ مَخْلُوقٌ ، وَالْقُرْآنُ كَلَامُ اللَّهِ . 493
அம்ர் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்பாளன் ; அவன் அல்லாதவை யாவும் படைக்கப்பட்டவை ; குர்ஆன் மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) என்று சொல்லக்கூடிய மக்களையே எழுபது ஆண்டுகளாக நான் கண்டுவருகிறேன் .
Reference: ( பைஹகீ : 43 / 10)
ஹதீஸ் 494
அத்தியாயம் 10
பாடம் 14
عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ كَلَامِ اللَّهِ عَلَى كَلَامِ خَلْقِهِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ . 494
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஷஹ்ர் பின் ஹவ்ஷப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுடைய பேச்சைவிட அல்லாஹ்வுடைய பேச்சின் சிறப்பு அல்லாஹ்வுடைய படைப்புகளைவிட அவனுடைய சிறப்பைப் போன்றது .
Reference: ( தாரிமீ : 3400) இது ‘ முர்ஸல் ’ வகை ஹதீஸ் ஆகும் . இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஹஸன் ’ தரத்தில் அமைந்துள்ளது .