9-باب : في كم يقرأ القرآن
பாடம் 9

பாடம்: 9. குர்ஆனை எத்தனை நாள்களில் ஓதலாம்

ஹதீஸ் 485 அத்தியாயம் 10 பாடம் 9

(ق ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلَا تَزِدْ عَلَى ذَلِكَ . 485

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஒவ்வொரு மாதமும் ( ஒரு முறை குர்ஆனை ) ஓதி நிறைவுசெய் !`` என்று கூறினார்கள் . அப்போது நான் , “( அதைவிடக் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் ) சக்தி எனக்கு உள்ளது `` என்று கூறினேன் . அப்படியானால் , ஏழு நாட்களில் ( ஒரு முறை ) ஓதி நிறைவுசெய் ; அதைவிட ( ஓதுவதை ) அதிகமாக்கிவிடாதே `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 5054, முஸ்லிம் : 1159) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் உள்ளதாவது : “( அவ்வாறாயின் வாரத்துக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக ) அதைவிட அதிகமாக்க வேண்டாம் . ஏனெனில் , உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன ; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன ; உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . ( முஸ்லிம் : 2137).
ஹதீஸ் 486 அத்தியாயம் 10 பாடம் 9

(م ) عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنْ اللَّيْلِ . 486

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதி வருபவற்றை , அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜ்ர் தொழுகைக்கும் லுஹ்ர் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு ( நன்மை ) எழுதப்படுகிறது .

Reference: ( முஸ்லிம் : 747 / 1360)